மக்கள் தொகை கணக்கெடுப்பு: 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க கோரிக்கை
1 Oct 2026, 12:29 am

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க கோரிக்கை

சேலம், செப்.30-மக்கள்தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் முழுமையாக சேர்க்க வலியுறுத்தி, தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் மக்கள்தொகை கணக்கடுப்புப் பணியில் பார்வைத்திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சுக் குறைபாடு, இயக்கததிறன் குறைபாடு, அறிவுசார் மாற்றுத்திறன், அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலக் குறைபாடு, நாள்பட்ட நரம்பியல் நோய், ரத்தக்கோளாறு போன்ற ரத்த சார்ந்த பாதிப்புகள்) ஆகிய 9வகையான மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பதிவு செய்யப் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016’-ன் படி (Rightsof Persons with Disabilities Act, 2016) 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில் 9 பிரிவினர் மட்டுமே சேர்க்கப்படுவதால், ஏனைய பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையையும் துல்லியமாகப் பதிவு செய்து,அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை முழுமையாக சென்றடைய வேண்டும். எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தவறாமல் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் ஜெ. ஜான் பெர்னாண்டஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.