தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் அரசுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: இயக்குநர் எம்.சுந்தரேஷ்

22 Jul 2026, 9:35 pm
மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் அரசுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: இயக்குநர் எம்.சுந்தரேஷ்
<p><strong>மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் அரசுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: இயக்குநர் எம்.சுந்தரேஷ்</strong></p><p>மதுரை, ஜூலை 22- மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் நேரடியாக அரசு திட்டங்களை செயல்படுத்த பயன் படுத்தப்படாது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை யில்லை என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இயக்குநர் எம். சுந்தரேஷ் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு– 2027 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இயக்குநர் எம்.சுந்தரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணை யாளர் கௌரவ் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொட ங்கியுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் சுமார் 1.60 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். முதல் கட்ட மாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பும், இரண்டாம் கட்ட மாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடை பெறவுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட களப்பணி தொடங்கும் என்றார். இந்த முறை முழுமையான டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெறுவது டன், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சுய விபரங்களை பதிவு செய்யும் வசதியும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கணக்கெடுப்பு தகவல்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டமிடலுக்காக மட்டுமே பயன் படுத்தப்படும் என்றும், தனிநபர் விபரங்கள் வெளியிடப்படாது; தொகுப்புத் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், குடியுரிமை, வாக்கு ரிமை, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) உள்ளிட்ட எந்தவொரு விவகாரத்துடனும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தொடர்பில்லை என்றும் விளக்கமளித்தார். வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கணக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்றும், ஆன்லைனில் சுய கணக்கெடுப்பு செய்த வர்கள் பதிவு எண்ணை கணக்கெடுப்பு அலு வலரிடம் காண்பித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். கணக்கெடுப்பு பணியாளர்கள் அதி காரப்பூர்வ அடையாள அட்டையுடன் மட்டுமே வீடுகளுக்கு வருவார்கள். அடை யாள அட்டை இல்லாத நபர்களிடம் எந்தத் தகவலையும் வழங்கக் கூடாது. மோசடி களைத் தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறி வுறுத்தினார். மேலும், வீடுகளை கண்டறிய உயர்தர வரைபட தொழில்நுட்பம் பயன்படுத்தப் படும் என்றும், ஆறு கணக்கெடுப்பு பணியா ளர்களுக்கு ஒருவரை கண்காணிப்பாளராக நியமித்து பணிகள் மேற்பார்வை செய்யப் படும் என்றும் இயக்குநர் எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.