நெமிலி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைப் பணி
27 Dec 2025, 6:08 pm
<p><strong>நெமிலி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைப் பணி</strong></p>
<p>ராணிப்பேட்டை, டிச. 27 – நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பநல்லூர் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலை கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா கினர். இது குறித்து அப்பகுதியின் ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக் குமார் ஒன்றிய குழு கூட்டத்தில் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையின் தரம் மற்றும் தடிமன் குறித்து ஆய்வு செய்த அவர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்துத் தர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார், சயன புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, நிர்வாகிகள் பிரகாஷ், புரு ஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
