கேபிள் டிவி மூலம் சிசிடிவி கண்காணிப்பு: புதிய தொழில்நுட்பம் தொடக்கம்
7 May 2026, 11:52 pm
<p><strong>கேபிள் டிவி மூலம் சிசிடிவி கண்காணிப்பு: புதிய தொழில்நுட்பம் தொடக்கம்</strong></p><p>கோவை, மே 7- கோவை மாநகரின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத் தும் வகையில், இணையதள வசதி இன்றியே கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள் மூலம் கண்காணிப்பு கேமராக்களை கண் காணிக்கும் முன்னோடித் திட்டத்தை மாந கரக் காவல் ஆணையர் கண்ணன் புதனன்று தொடங்கி வைத்தார். வழக்கமாக சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க இணையதள வசதி அவசிய மாகும். ஆனால், தற்போது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஒத்துழைப்போடு, கேபிள் இணைப்பு வயர்கள் மூலமாகவே கேமராக் களை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பம் புகுத்தப் பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தைச் செயல்ப டுத்த ராசி சீட்ஸ் (Rasi Seeds) நிறுவனம் நிதி யுதவி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக ஆர். எஸ்.புரம் பகுதியில் சுமார் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கேபிள் டிவி இணைப்புகள் மூலம் மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க முடி யும். கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள் மற் றும் போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேமராக்களை இணைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நகரின் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்படுவதோடு, குற்றச் செயல்க ளில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறி யவும், குற்றங்களை தடுக்கவும் வழிவகை ஏற்படும் என்று காவல்துறை செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் கலந்துகொண்டனர்.</p>
