தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மணல் திருட்டை ஒழிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

27 Sept 2026, 10:28 pm
மணல் திருட்டை ஒழிக்க  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மணல் திருட்டை ஒழிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தஞ்சாவூர், செப். 27- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்்டம், அதிராம்பட்டினம் காவல் நிலைய சரக எல்லையில், மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்்கும் நோக்கில், இரண்டு முக்கிய இடங்களில் உயர்தர கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிதா திறந்து வைத்தார்.

அதிராம்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்்குட்பட்ட தொக்காளிக்காடு கிராமத்தில் அக்னி ஆற்றுப்படுகை மற்றும் தொக்காளிக்காடு ஆற்றுப்படுகை பாலம் ஆகிய இரு இடங்களிலும் மணல் திருட்டு அடிக்கடி நடைபெற்று வந்தது. இதனைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் உத்தரவிட்டதன் பேரில், காவல்து

றையினர் இரு இடங்களிலும் சேர்த்து மொத்தம் 8 உயர்தர கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளனர்.

சோலார் மின்சாரத்தில் இயங்கும் இந்த கேமராக்களின் பதிவுகள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்

்திலிருந்தே நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆற்றுப்படுகை பகுதிகளில் நடைபெறும் அனைத்து நடமாட்டங்களும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனடியாக தகவல் கிடைப்பதால், அவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் அதிராம்்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் உடனிருந்தார். மேலும், கேமராக்கள் தற்போது முழுமையாக இயக்கத்தில் இருந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.