முந்தய பக்கம்

ஒரு வாரத்திற்குள் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - சிபிஎஸ்இ உத்தரவு

10 Apr 2026, 12:09 pm
ஒரு வாரத்திற்குள் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - சிபிஎஸ்இ உத்தரவு
<p>சிபிஎஸ்இ தனது இணைப்பு பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 6ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி (R3) பாடத்தை 7 நாட்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. .</p><p>ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 2026–27 கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவசரமும் கட்டாயமும்” எனக் குறிப்பிட்டு, இதுவரை நடைமுறைப்படுத்தாத அனைத்து பள்ளிகளும் ஒரு வாரத்திற்குள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என CBSE எச்சரித்துள்ளது.</p><p>பாடப்புத்தகங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், “உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களை பயன்படுத்தி உடனடியாக R3 கற்பித்தலை தொடங்க வேண்டும்” என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் தாங்கள் கற்பிக்க உள்ள மூன்றாவது மொழியைத் தீர்மானித்து, அதன் விவரங்களை OASIS தளத்தில் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிட்துள்ளது</p><p>மேலும் 6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் மொழிகளே 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் தேர்வுப் பாடங்களாக வழங்கப்படும் என்பதால். மாணவர்களின் எதிர்கால பாடத் தேர்வுகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்</p>
Share
FacebookXWhatsAppTelegram