சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கையில் சிக்கல்
15 May 2026, 11:03 pm

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கையில் சிக்கல்

சென்னை, மே 15- தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக் கான கட்-ஆஃப் கணக்கிடப்படுவதில் இயற்பியல் மதிப்பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ மாணவர்களுக்குப் பொறியி யல் படிப்புகளில் சேருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தேசிய அளவில் இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 96 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், சென்னையின் பல முன்னணிப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை.

கடினமான வினாத்தாளே இதற்குக் காரணம் என்றும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை காலத்திற்கேற்ப மேம்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், இயற்பியலில் குறைந்த மதிப்பெண்களை மாணவர்கள் கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களில் ஈடு செய்துள்ளதால், கட்-ஆஃப் மதிப்பெண்க ளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என சில பள்ளி முதல்வர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாடங்களை வெறும் மனப்பாடம் செய்யாமல், கருத்துகளை ஆழமாகப் புரிந்து படிக்கும் அணுகு முறையை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால், இத்தகைய கடினமான வினாத்தாள்களையும் எளிதாக எதிர்கொண்டு அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.