சிபிஎஸ்இ 7,8,9-ஆம் வகுப்புகளுக்கான மும்மொழித் திட்ட விதிகளில் தளர்வு
29 Jun 2026, 8:39 pm
<p><strong>சிபிஎஸ்இ 7,8,9-ஆம் வகுப்புகளுக்கான மும்மொழித் திட்ட விதிகளில் தளர்வு</strong></p><p>புதுதில்லி, ஜூன் 29 - தற்போது 10-ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை. மேலும், தற்போது 7, 8, 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று விதிகளில் தளர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம். அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புக்கு ஏற்ற பாட புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
