9, 10ஆம் வகுப்புகளுக்கு மூன்று மொழிகள் கட்டாயம் சிபிஎஸ்இ அறிவிப்பு
16 May 2026, 8:57 pm
<p><strong>9, 10ஆம் வகுப்புகளுக்கு மூன்று மொழிகள் கட்டாயம் சிபிஎஸ்இ அறிவிப்பு</strong></p><p>மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வர விருக்கும் 2026-27 கல்வி யாண்டு முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்புக ளுக்கான மொழிப் பாடத் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி,”2026 ஜூலை 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை (R1, R2 மற்றும் R3) படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியத் தாய்மொழி களாக இருக்க வேண்டும். மாணவர்க ளின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில், 10-ஆம் வகுப்பு அளவில் மூன்றாவது மொழிக்கு (R3) பொ துத்தேர்வு எதுவும் நடத்தப்படாது. புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் தயாராகாத தால், இந்த மாற்றக் காலத்தில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக தாங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கான 6-ஆம் வகுப்பு ‘ஆர் 3’ பாடப்புத்தகங்களைப் பயன் படுத்துவார்கள். இதனுடன் உள்ளூர் அல்லது மாநில அளவிலான இலக்கிய உள்ளடக்கங்களையும் சேர்த்து கற்பிக்கு மாறு பள்ளிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. </p>
