சிபிஎஸ்இ-இன் இந்தித் திணிப்பு
18 May 2026, 9:33 pm

சிபிஎஸ்இ-இன் இந்தித் திணிப்பு

இந்த ஆண்டு 9ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளில் இரண்டு இந்திய மொழிகள் இருக்கவேண்டும் எனவும் வெளிநாட்டு மொழி ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் சி.பி.எஸ்.இ.நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இது ஏற்கெனவே பாண்டிச்சேரியில் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. பாண்டிச்சேரியில் தமிழ் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கு தேர்வு செய்யும் மாணவர்கள் மற்ற இரு மொழிகளாக வழக்கமாக ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் இப்பொழுது அவர்கள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியை கைவிட வேண்டும்.

இதே போல தமிழ்நாட்டிலும் ஆங்கிலம் மற்றும் தமிழை தேர்வு செய்த பின்னர் மலையாளம்,கன்னடம் போன்ற இந்தி அல்லாத மொழியை தேர்வு செய்வதாக இருந்தால் அதற்கானஆசிரியர்கள் இருக்க வேண்டும். இந்தி ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால் மாணவர்கள் இந்தியைதேர்வு செய்ய நிர்பந்திக்கப்படுவர். இது வடமாநிலங்களில் பயிலும் தென்னிந்தியமாணவர்களுக்கும் சிக்கலை உருவாக்கியுள்ளது. அங்கு ஏற்கெனவே தென்னிந்திய மாணவர்கள்படிக்கும் பொழுது ஆங்கிலம், பிரெஞ்சு,ஜெர்மனி போன்ற மொழிகளில் இரண்டையும் தமது தாய்மொழியையும் தேர்வு செய்தனர். ஆனால் இப்பொழுது ஆங்கிலம் மற்றும் தமது தாய் மொழியுடன்வேறு தென்னிந்திய மொழியை தேர்வு செய்யும் வசதி இருந்தாலும் அந்த மொழிக்கானஆசிரியர்கள் இருப்பது இல்லை. இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்குதான் ஆசிரியர்கள் உள்ளனர்.எனவே இந்த இரு மொழிகளில் ஒன்றையே அவர்கள் தேர்வு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இது மறைமுக இந்தி அல்லது சமஸ்கிருதத் திணிப்பாக கருதப்படுகிறது.