தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎஸ்இ தேர்வு திருத்த முறைகேடு விசாரணையில் உண்மை வெளிவருமா? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

2 Jun 2026, 9:34 pm
சிபிஎஸ்இ தேர்வு திருத்த முறைகேடு விசாரணையில் உண்மை வெளிவருமா? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

சிபிஎஸ்இ தேர்வு திருத்த முறைகேடு விசாரணையில் உண்மை வெளிவருமா? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

மதுரை, ஜூன் 2- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள் ஸ்கேனிங்கில் குளறுபடி (ஆன்லைனில் திருத்தியதால்), மாணவர்களின் விடைத்தாள் மாற்றம், மறுமதிப்பீட்டில் நடந் துள்ள முறைகேடு என பல்வேறு அதிர்ச்சிகர மான உண்மை தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி மாணவர்களையும் பெற்றோர் களையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தி யுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு திருத்த முறைகேடு விசாரணையில் உண்மை வெளி வருமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில்,”நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பிரச்சனை வெடித்து அதன் புகை அடங்கு வதற்கு முன்பாக சிபிஎஸ்இ தேர்வு திருத்த முறைகேடு வெடித்துள்ளது. சிபிஎஸ்ஐ தலைவர், செயலாளர் இட மாற்றம், விசாரணை என ஏதோ கடும் நடவடிக்கை களை எடுப்பது போல ஒன்றிய அரசு பாவனை செய்துள்ளது.

ஆனால் இது ஒன்றிய அரசின் ஆளுகைத் திறனின் தோல்வி. அப்பட்டமான முறைகேடு களின் அடுத்தடுத்த வெளிப் பாடு.

எத்தனையோ புகார்கள் டிஜிட்டல் திருத்த முறைமை பற்றி வந்த போதும் அவற்றை புறம்தள்ளி கடந்து செல்ல முனைந்த ஒன்றிய அரசை 19 வயது நிசர்கா அதிகாரி என்ற இளைஞர் “தார்மீக மென்பொருள் ஊடு ருவலை” (Ethical Hacker) செய்து அம்பலப் படுத்திய பின்னரே ஒன்றிய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது வெட்கக்கேடானது.

விசாரணையில் உண்மை வருமா? உண்மையை வெளிக்கொணரும் அரசியல் உறுதி ஒன்றிய அரசுக்கு உண்மை யிலேயே இருக்கிறதா?” என சு.வெங்க டேசன் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.