9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி அகமதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சி.பி.எஸ்.இ சுற்றறிக்கை
14 Jul 2026, 3:27 pm

சி.பி.எஸ்.இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழிக்கான அகமதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் “தேசியக் கல்விக் கொள்கை” என்ற ஒற்றையாட்சிச் சூழ்ச்சியின் கீழ், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிவழிக் கொள்கையைத் தன்னிச்சையாகவும் அவசர கதியிலும் திணித்து வருகிறது. ஆங்கிலத்தை ஒரு “அந்நிய மொழி” என்று வகைப்படுத்தி, அதன் மூலம் பிரெஞ்சு போன்ற பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைத் தடுத்து, ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும் என்று மே மாதத்தில் சிபிஎஸ்இ உத்தரவிட்டது. இதன் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சூழலில், சி.பி.எஸ்.இ புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-28ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இரு மொழிக்கான தேர்வுகள் மட்டுமே இருக்கும். 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழிக்கான அகமதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மாணவர்களுக்கு மூன்றாம் மொழி சார்ந்த பள்ளி அளவிலான அகமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால்தான் 10ஆம் வகுப்பு சான்றிதழ் கிடைக்கும் என்றும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மறுமதிப்பீட்டிற்கான (re-assessment) வாய்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.