தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டிலும் கல்லா கட்ட முயற்சி?

25 May 2026, 9:27 pm
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டிலும் கல்லா கட்ட முயற்சி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டிலும் கல்லா கட்ட முயற்சி?

நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டதன் மூலம் பாஜகவினர் கோடிக் கணக்கில் கல்லா கட்டினர்.

இதே போல சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டிலும் முறைகேடு மூலம் கல்லா கட்ட முயற்சி நடந்துள்ளதாக சந்தேகம் கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்தது.

கிட்டத்தட்ட 3% மேல் சரிந்தது.

ஆன்லைன் மூலம் தேர்வு தாளை திருத்தியதால் தான் தேர்ச்சி விகிதம் குறைந்தது என சிபிஎஸ்இ மழுப்பியது. தொடர்ந்து மறு மதிப்பீட்டு கட்டணத்தை குறைத்து (ஒரு பாடத்திற்கு ரூ.100) ஒன்றிய மோடி அரசு பிரச்சனையை திசை திருப்பியது.

மாணவர்களின் கவலைகளை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், மே 19 முதல் ஆன்லைனில் மறுமதிப்பீட்டுக் கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 8,000 முதல் ரூ. 69,000 வரை தாறுமாறாக வசூ லிக்கப்பட்டது. ரூ.100 போதும் என அறிவிக்கப் பட்ட மறுமதிப்பீட்டு கட்டணம் எப்படி ரூ. 69,000 வரை சென்றது என மாணவர்கள், பெற்றோர்கள் குழம்பியுள்ளனர்.

தேர்வில் தேர்ச்சி பெறாத, வசதி படைத்த சில மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 69,000 என்ற அளவில் லட்சக்கணக்கில் செலவு செய்து பணத்தை கட்டியுள்ளனர்.

பிரச்சனை வெளியில் கசியவே சர்வர் கோளாறு என சிபிஎஸ்இ சமாளித்துள்ளது. ஆனால் உண்மையில் சிபிஎஸ்இ ஆன் லைன் போர்ட்டல் தளத்தில் புரோக்கர்கள் நுழைந்து, இந்த தொகை கட்டினால் தேர்ச்சி பெற வைக்கிறோம் என கூறினார்களா? ஹேக் செய்யப்படாமல் எப்படி திடீரென ஒரு பாடத்திற்கு, அதுவும் ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் ரூ.50,000 தொகைக்கு மேல் கட்டணம் கேட்கப் பட்டது? சர்வர் பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ ஆன்லைன் போர்ட்டலும், மறுமதிப்பீடு செய்த அனைத்து மாணவர்களிடமும் ரூ.50,000 தொகைக்கு மேல் கட்டணம் கேட்டிருக் கும்.

ஆனால் ஒரு சில இடங்களில், ஒரு சில மாண வர்களிடம் மட்டும் இது சாத்தியம்? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

இதனால் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் மறு மதிப்பீட்டிலும் பாஜகவினர் முறைகேடு மூலம் கல்லா கட்ட முயற்சி மேற்கொண்டனரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.