தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு ஒரு பாடத்திற்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.69,000

24 May 2026, 8:44 pm
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு ஒரு பாடத்திற்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.69,000
<p><strong>சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு ஒரு பாடத்திற்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.69,000</strong> </p><p>சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 13 அன்று அறிவிக்கப் பட்டது. இதில் மாணவர்களின் தேர்ச்சி கடுமையாக சரிந்தது. ஆன்லைன் மதிப்பீடு முறை காரண மாகவே மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக சிபிஎஸ்இ மழுப்பியது. மேலும் இதுதொடர்பான மாணவர்களின் கோரிக்கையயும் புறந்தள்ளி, மறு மதிப்பீடு முறைக்கு கட்டணத்தை குறைத்து பிரச்சனையை திசை திருப்பி யது. மறுமதிப்பீடு செயல்பாடு மே 19 அன்று தொடங்கியது. மறுமதிப்பீடு செயல்பாடில் விடைத்தாள்களின் நகல்களைப் பெற மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.100 செலுத்தினால் போதும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. ஆனால், சிபிஎஸ்இ இணைதளத்தில் பல மாணவர்களிடம் ஒரு பாடத்திற்கு ரூ.8,000 முதல் அதிகபட்ச மாக ரூ.69,420 வரை செலுத்தக் கோரப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. மாணவர்கள் சிலர் இந்த கட்டணத்தை செலுத்தியுள்ளனர். செலுத்த முடியாத மாணவர்கள், கட்டண விவரங்களின் ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது மாண வர்களிடையேயும் பெற்றோர்களிடை யேயும் பெரும் பீதியை ஏற்படுத்தின. மழுப்பல் இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில், “புகார ளிக்கப்பட்ட அனைத்துப் பிரச்சனை களையும் தாங்கள் கண்காணித்து வரு கிறோம். காலக்கெடுவை நீட்டிக்கி றோம். தொழில்நுட்பத் தலையீடுகள் உள்ளிட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாண வர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்ட ணம் திருப்பி தரப்படும். குறைவாக காட்டிய கட்டணத்தை செலுத்திய மாண வர்கள் எஞ்சிய தொகையை செலுத்த அறிவுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நிவார ணம் தரப்படும். பாதிக்கப்பட்ட மாணவர் கள் விடைத்தாள் நகல்களுக்காக மீண் டும் புதிய கோரிக்கைகளை சமர்ப்பிக்கத் தேவையில்லை” என சிபிஎஸ்இ உறுதி யளித்துள்ளது. கவலையில் மாணவர்கள் சிபிஎஸ்இ உறுதிமொழி அளிக்கப் பட்ட போதிலும், கோளாறு நிலவிய காலத்தில் ஏற்கெனவே பணம் செலுத்திவிட்டு, பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அல்லது உறுதிப்படுத்த லுக்காகக் காத்திருக்கும் மாணவர்களி டையே இன்னும் கவலை நீடிக்கிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.