தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்

17 May 2026, 9:46 pm
மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்

மாணவர்களின் கவலைகளை நிராகரித்த மோடி அரசு விடைத்தாள் சரிபார்ப்பு கட்டணத்தை குறைத்து திசை திருப்பல்

​​​​​​​புதுதில்லி சிபிஎஸ்இ (மத்திய இடை நிலை கல்வி வாரியம்) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 13 அன்று பிற்பகல் 1:40 மணிக்கு வெளியிட்டது. இந்த ஆண்டு சுமார் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெ ழுதினர்.

ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.19 சதவீதம் குறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விடைத்தாள்களைத் திருத்த ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ முறை யை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி யது. இது டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் திரைவழி மதிப் பெண் வழங்கும் முறை ஆகும்.

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை யால் தான் தேர்ச்சி, மதிப்பெண் குறைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாணவர் களின் கவலைகளை மோடி அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசின் பள்ளி கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் ஞாயிறன்று செய்தியாளர் சந்திப் பின் போது கூறுகையில், “சமீ பத்தில் சிபிஎஸ்இ வெளியிட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், இந்த முறை ‘ஆன்-ஸ்கிரீன் மார்க் சிங்’ முறையைப் பயன்படுத்தி திருத்தப்பட்டன. இதற்கு மாண வர்கள் தரப்பில் சில கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள தாக மாணவர்கள் கருதுகின்றனர். உண்மையில், கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் தேர்ச்சி சத வீதம் 3 விழுக்காடு குறைந்து, 88%- லிருந்து 85%-ஆக வீழ்ச்சியடைந் துள்ளது. த

ங்களுக்குக் கிடைத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று சில மாணவர்கள் கருதுகின்றனர். ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் என்பது ஒரு புதிய கருத் தாக்கமோ அல்லது இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப் படும் ஒன்றோ அல்ல.

சிபிஎஸ்இ முதன்முதலில் 2014ஆம் ஆண்டிலேயே ஒஎஸ்எம் முறையைத் தொடங்கியது.

இருப்பினும், அக்காலத்தில் இருந்த தொழில்நுட்ப உள்கட்ட மைப்பு குறைபாடுகள் காரண மாக, அந்த செயல்முறையை உட னடியாகத் தொடர இயலவில்லை. இந்த ஆண்டு அதை நாங்கள் வெற்றிகரமாக மீண்டும் அறி முகப்படுத்தியுள்ளோம்.

அதனால் மாணவர்களின் கவலைகளை நிரா கரிக்கிறோம்.

மாணவர்கள் தங்களது விடைத்தாள்களைப் பார்க்க விரும்பினால், இந்த முறை ரூ.700-க்கு பதிலாக ரூ.100 கட்டணம் செலு த்தினால் போதும் என சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. விடைத்தா ளைச் சரிபார்க்க அல்லது சரி பார்க்கக் கோர, அதற்கும் ரூ.500-க்கு பதிலாக ரூ.100 மட்டுமே கட்ட ணமாகும்.

ஏதேனும் ஒரு குறிப் பிட்ட கேள்விக்கு மட்டும் மறு மதிப்பீடு செய்ய விரும்பினால், ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணமாக இருக்கும்” என அவர் கூறினார்.

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை யால் தான் தேர்ச்சி, மதிப்பெண் குறைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டை திசைதிருப்ப விடைத்தாளைச் சரிபார்ப்பு கட்ட ணத்தை குறைத்து திசை திருப்பல் வேலையை தொடங்கியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.