சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் பெரும் முறைகேடு 18.5 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் வெளியில் கசிந்தது
31 May 2026, 8:47 pm

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் பெரும் முறைகேடு 18.5 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் வெளியில் கசிந்தது

புதுதில்லி, மே 31- நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை யைத் தொடர்ந்து, தற்போது சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீ ட்டில் நடந்துள்ள அதிர்ச்சிகரமான குளறுபடி, மாணவர்களையும் பெற் றோர்களையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் மறுமதிப்பீட்டில் செய்யப் பட்ட புதிய முறைகேடுகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.

விடைத்தாள்கள் காணவில்லை

ஏற்கெனவே தில்லி, ஜார்க்கண்ட் மாணவர்களின் விடைத்தாள் மாறி யுள்ள புகாரைத் தொடர்ந்து, ஒடிசா வின் மயுர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற கடற்படை அதி காரி பிரசாந்த் குமார் ஆச்சார்யா வின் மகளும், ராணிபோல் ஒடிசா ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியின் மாணவியுமான அங்கிதா ஆச்சா ர்யாவின் விடைத்தாள் குளறுபடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அங்கிதா ஆச்சார்யா கூறுகையில், “எனக்கு எதிர்பாராத விதமாக மிகக் குறைந்த மதிப்பெண்கள் வந்த தால், இயற்பியல் விடைத்தாளை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தி ருந்தேன். ஆனால் 14, 15 ஆகிய பக்கங்கள் இரட்டிப்பாக தோன்று கின்றன; அதேவேளையில் 16, 17 ஆகிய பக்கங்கள் முற்றிலும் காணா மல் போயிருக்கின்றன. அதாவது அந்தப் பக்கங்களில் நான் எழுதிய விடைகள் மதிப்பீடே செய்யப்பட வில்லை. மேலும் 13ஆம் பக்கத்திலுள்ள விடை மதிப்பி டப்படாமல் 14ஆம் பக்கத்தின் மறு வடிவமாக தவறாகக் குறிக்கப் பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி னார். இளம் மாணவர்களின் எதிர் காலத்தோடு விளையாடும் இந்தச் செயலை ஒரு மிகப்பெரிய ஊழல் என்று பெற்றோர்களும் ஆசிரியர் களும் கண்டித்துள்ளனர்.

விடைத்தாள் பொது வெளியில் கசிவு

இந்த அதிர்ச்சி அடங்கு வதற்குள், நிசர்கா அதிகாரி என்ற 19 வயது இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சிபிஎஸ்இ தளத்தி லிருந்து விடைத்தாளை எளிதாகப் பதிவிறக்கம் செய்துள்ளார். அவர் மட்டுமல்ல, யார் வேண்டுமானா லும் பதிவிறக்கம் செய்யும் வகை யில் சிபிஎஸ்இ தளம் திறந்தே இருந்துள்ளது. மறுமதிப்பீட்டிற்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பி த்தால் மட்டுமே விடைத்தாள் கிட்டும் என்ற நிலையில், நிசர்கா உள்ளிட் டோர் சிபிஎஸ்இ தளத்திலிருந்து எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விடைத்தாளைப் பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக நிசர்கா அதிகாரி தனது எக்ஸ் (X) பக்கத்தில், “சிபிஎஸ்இ தரப்பினர் தங்களது ஏ.டபிள்யூ.எஸ் பக்கெட்டை (AWS bucket - கிளவுட் சேமிப்பிடம்) சரியாக உள்ளமைக்கவில்லை. இத னால், 2026ஆம் ஆண்டின் விடைத் தாள்கள், வினாத்தாள்கள் அடங்கிய அவர்களின் அனைத்து கோப்புகளையும் இப்போது நாம் வரிசையாகப் பக்கம் பக்கமாகப் பார்க்க முடிகிறது. ‘ListObjectsV2’ கட்டளை எந்தவொரு அங்கீகார மும் இல்லாமலேயே வேலை செய் கிறது” என்று கூறி, பல மாணவர் களின் விடைத்தாளை பகிர்ந்துள் ளார். இது நாடு முழுவதும் பேர திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

“ஊழல்களின் அமைச்சகம்”

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

“‘ஊழல்களின் அமைச் சகம்’ என்று அழைக்கப்படும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய குளறுபடியாக, சிபி எஸ்இ 12ஆம் வகுப்பு மாண வர்களின் விடைத்தாள்கள் பொது வெளியில் வெளியாகியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது 18.5 லட்சம் மாணவர்களின் தனிமனித ரகசியத்தன்மையை ஆபத்தில் தள்ளியுள்ள மிகப்பெரிய தரவு கசிவு ஆகும். ‘கோம்ட் எடுடெக்’ (Coempt EduTeck) நிறுவனத்தின் திறமையின்மையும் பொறுப்பற்ற தனமும் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.

வெளியாகியுள்ள விடைத்தாள் களில் தாள்கள் மடிக்கப்பட்ட அடை யாளங்களும், விரல் நிழல்களும் (Shadows) காணப்படுகின்றன. இவை வழக்கமாக ஸ்கேனிங் இயந்திரங்களுக்குப் பதிலாக மொபைல் போன்கள் மூலம் ஸ்கேன் செய்யப்படும்போது ஏற்படும் அடையாளங்களாகும். மூன்றாவது டெண்டர் விதிமுறைகளிலிருந்து ‘ரோபோடிக் ஸ்கேனர்’ பயன் பாட்டுக்கான நிபந்தனை நீக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும். அப்படியெனில், கோம்ட் எடுடெக் நிறுவனம் உண்மையில் என்ன வகையான ஸ்கேனர்களைப் பயன் படுத்தியது? ஸ்கேன் செய்யப்பட்ட தரம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கோம்ட் எடுடெக் (முன்பு Globarena Technology என்று அழைக்கப்பட்டது) நிறுவனம் இதற்கு முன்பும் ஒடிசா, தெலுங்கா னா மாநில மதிப்பீட்டு திட்டங்களில் தொழில்நுட்பச் சறுக்கல்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ அமைப்பு இந்த தரவு கசிவு குறித்து உறுதியாக பதி லளிக்கவில்லை; இணைய பாது காப்பு குறைபாடுகளை நேரடியாக தனக்கு அனுப்பும்படி secy-cbse@nic.inமின்னஞ்சல் வழியாக கோரி யுள்ளது மட்டுமே அதன் அலு வலக அறிவிப்பாக உள்ளது.