சிபிஎஸ்இ தலைவரும் செயலாளரும் இடமாற்றம்!
2 Jun 2026, 9:29 pm
<p><strong>சிபிஎஸ்இ தலைவரும் செயலாளரும் இடமாற்றம்!</strong></p><p>புதுதில்லி, ஜூன் 2- ‘நீட்’ தேர்வு வினாத் தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம் மற்றும் மறுமதிப்பீட்டிலும் அதிர்ச்சிகரமான குளறு படிகள் வெளிச்சத்திற்கு வந் துள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் மதிப்பீட்டு முறை கேட்டை ஒன்றிய மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சிபிஎஸ்இ விடைத்தா ள்களைக் கையாளுதல் மற்றும் டிஜிட்டல் முறையில் திருத்தும் முதன்மை முக்கி யத்துவம் வாய்ந்த பணி, ஏற்கெனவே கருப்புப் பட்டி யலில் இருந்த ‘கோம்ட் எடு டெக்’ என்ற தனியார் நிறு வனத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. அந்நிறுவனத் தின் தரமற்ற ஸ்கேனிங் காரணமாக, விடைத்தாள் களில் பல பக்கங்கள் விடு பட்டும் மங்கலாகவும் இருந் துள்ளன. இதனால் மாண வர்கள் பெருமளவில் மதிப் பெண்களை இழந்துள்ளனர். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப் பித்தபோது, ஒரு மாண வரின் கணக்கில் மற்றொரு வரின் விடைத்தாள் காட்டிய அதிர்ச்சிச் சம்பவங்களும் அம்பலமாகின. இதன் எதிரொலியாக, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் (ஐஏஎஸ்), செயலா ளர் ஹிமான்ஷு குப்தா (ஐஏஎஸ்) ஆகிய இருவரை யும் அப்பொறுப்புகளி லிருந்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் உடன டியாக இடமாற்றம் செய்துள் ளது. மேலும், இந்த ஒப்பந்த புள்ளி விவரங்களை முழு மையாக விசாரிக்கத் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்.ராதா சவு கான் தலைமையில் ‘ஒரு நபர் விசாரணைக் குழு’ அமைக்கப்பட்டு உத்தர விடப்பட்டுள்ளது.</p>
