தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு! ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்!

1 Jun 2026, 8:50 pm
சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு! ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்!

சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு! ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்!

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூன் 1 - சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப் பீட்டுக் குளறுபடி; ஊழலுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மே ந்திர பிரதான், பதவியிலிருந்து விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத் தாள்களை கையாளும் பணியை, கருப்புப் பட்டியலுள்ள ஒரு தனி யார் நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கியது. அந்த நிறு வனம், தரமற்ற முறையில் செய்த ஸ்கேனிங் விடைத்தாளை திருத்தி யதில் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் விடைத்தாள்கள் முழுமையாக ஸ்கேன் செய்யப்படாமலும், சில பக்கங்களை ஸ்கேன் செய்யாம லும் விட்டதால், மதிப்பெண் இழ ப்பைச் சந்தித்தனர். கடந்த வாரம் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. மாணவர்களின் எதிர் காலத்தோடு விளையாடுவதா? என்று பெற்றோர்களும் ஆசிரியர் களும் கண்டனம் தெரிவித்தனர்.

எனினும், மாணவர்கள் மீண்டும் பணம் செலுத்தி மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தபோது, விடைத் தாள்களை மாற்றி ஊழல் செய்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமல்லாமல், 18 லட்சத்து 50 ஆயிரம் விடைத் தாள்கள் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. இந்நிலையிலேயே, இந்த குளறுபடிகள் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தான், தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

மோடி அரசின் வரம்பற்ற அலட்சியம்

“மோடி அரசின் திறமை யின்மைக்கும் மனிதத் தன்மை யற்ற அலட்சியத்திற்கும் வரம்பி ல்லாமல் போய் விட்டது. தற்போது, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள், லட்சக்கணக்கில் எந்தவித அங்கீகாரப் பாதுகாப்பும் இன்றி எவரும் அணுகக்கூடிய வகையில் இருந்ததோடு, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய முடிந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முறைகேடாக ஒப்பந்தம்

கிடைக்கப்பெற்ற விடைத்தாள் களை ஒரு மேலோட்டமாகப் பார்த்தாலே, அவை முறையான ஸ்கேனிங் கருவிகளால் எடுக்கப் படாத தரமற்ற நகல் பிரதிகள் என்ப தும் தெளிவாகிறது. ஏற்கெனவே கருப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திற்கு ஆதாயமாக ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப் பட்டதுடன், விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன என்பது அம்பல மாகியுள்ளது.

கல்வியில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல்

இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பதற்றத்திலும் குழப்பத்திலும் தள்ளப்பட்டு, அவர் களின் எதிர்காலம் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கும் மேலாக, ஒப்ப ந்தம் வழங்கும் முன்பே ஒப்பந்த நிறு வனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் தனது உரிமையையே சிபிஎஸ்இ கைவிட்டது! நம் மாணவர்களும் இளைஞர் களும் உண்மையை அம்பலப் படுத்தியுள்ளனர்: இது ஒரு மிகப் பெரிய ஊழல்; இதற்குப் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்‌ பொறுப்பு. அவர் பதவியில் நீடிப்ப தற்கு எந்தத் தகுதியும் இல்லை; உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்!” இவ்வாறு எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.