சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் டெண்டரிலும் முறைகேடு? அம்பலப்படுத்திய ஜார்க்கண்ட் மாணவர்
31 May 2026, 8:14 pm

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் டெண்டரிலும் முறைகேடு? அம்பலப்படுத்திய ஜார்க்கண்ட் மாணவர்

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் டெண்டரில் முறைகேட்டை 17 வயது மாணவர் கண்டறிந்து, அதனை புள்ளி விபரக் குறிப்புடன் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஞ்சி மோடி அரசின் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் நடத்திய தேர்வின் ‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் குளறுபடிகள் இருப்பதாக ஏற்கெனவே பல புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநி லத்தைச் சேர்ந்த சர்தாக் சித்தாந்த் (17) என்ற மாணவர், தனது விடைத்தாள் மங்கலாகவும் அரைகுறையாகவும் திருத்தப்பட்டதால் அதிருப்தி அடைந் தார். மேலும் இதுகுறித்து விரிவான ஆய்வில் இறங்கிய அவர், பொது இணையதளத்தில் இருந்த 576 ஒன்றிய அரசு ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் மூலம், சிபி எஸ்இ அமைப்பு தனது விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தத்தை ஹைதரா பாத்தைச் சேர்ந்த ‘கோஎம்ட் எடுடெக்’ (CoEmt EduTech) என்ற தனியார் நிறு வனத்திற்கு வழங்குவதற்காக, டெண்டர் விதிகளில் திட்டமிட்டு முறை கேடுகளைச் செய்துள்ளதாகத் தனது இணையதளப் பக்கத்தில் ஆதா ரங்களை வெளியிட்டுள்ளார்.

மாணவர் பட்டியலிட்டுள்ள 15 முக்கிய முரண்பாடுகள்

இதுதொடர்பாக மாணவர் சர்தாக் சித்தாந்த் வெளியிட்டுள்ள விவரங்க ளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“சிபிஎஸ்இ அமைப்பு கடந்த 2025-ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களாக இந்த டெண்டர் நடைமுறையை நடத்தி யுள்ளது. பிப்ரவரி 2025இல் வெளி யிடப்பட்ட முதல் டெண்டர் திடீரென நீக்கப்பட்டது. மே 2025இல் நடந்த இரண்டாவது டெண்டரில் டிசிஎஸ் (டாடா) உள்ளிட்ட 4 முன்னணி நிறுவ னங்கள் பங்கேற்றும், அவை தொழில் நுட்ப தகுதியை எட்டவில்லை என்று கூறி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 2025இல் வெளியிடப்பட்ட மூன்றாவது டெண்டரில், கோஎம்ட் எடு டெக் நிறுவனத்திற்கு சாதகமாக விதி கள் மாற்றப்பட்டு ஒப்பந்தம் ஒப்ப டைக்கப்பட்டது. முன்பு கருப்பு பட்டிய லில் வைக்கப்பட்ட நிறுவனங்கள் பங் கேற்கக் கூடாது என்றிருந்த விதி, தற்போது (நிகழ்காலத்தில்) கருப்பு பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கக் கூடாது என தளர்த்தப்பட்டது. நிறுவனத்தின் குறைந்தபட்ச வருவாய் வரம்பு 50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பை கோஎம்ட் நிறுவனம் வெறும் 1.7 சதவீதம் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே கடந்தி ருந்தது. அதே போல சிஎம்எம்ஐ தரச் சான்றிதழ் தகுதி லெவல் 5-இல் இருந்து லெவல் 3 ஆகக் குறைக்கப்பட்டது” என அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் டெண்டரில் முறைகேட்டை 17 வயது மாணவர் கண்டறிந்து, அதனை புள்ளி விபரக் குறிப்புடன் குற்றம்சாட்டியுள் ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கல்வியாளர்கள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ மழுப்பல்

ஜார்க்கண்ட் மாணவரின் குற்றச் சாட்டுகளை சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அனைத்து அரசு விதி முறைகளும் முறையாகப் பின்பற்றப் பட்டு, தகுதியான நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. முந்தைய சுற்றுகளின் குறைகளைக் களைவ தற்காகவே விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டனவே தவிர, யாருக்கும் சாதகமாகச் செய்யப்படவில்லை. ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் எந்தவொரு அரசு அமைப்பாலும் கருப்பு பட்டிய லில் வைக்கப்படவில்லை” என்று மழுப் பலாக விளக்கம் அளித்துள்ளார்.

குளோபரினா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய பதிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த இடைநிலைத் தேர்வு முடிவுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டது. ‘குளோபரினா டெக்னாலஜிஸ்’ என்ற தனியார் நிறுவனமே, தற்போது ‘கோஎம்ட் எடுடெக்’ என பெயர் மாற்றம் பெற்று இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.