தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ

26 May 2026, 9:09 pm
மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ

மாணவர்களுக்கு தவறான விடைத்தாள்கள் வழங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ

​​​​​​​புதுதில்லி ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தியது; தேர்ச்சி விகிதம் குறைந்தது; மறுமதிப்பீட்டு குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு தவறான விடைத் தாள்கள் தவறாக மாற்றப்பட்ட நிகழ்வும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நிகழ்ந்துள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய வேதாந்த் என்ற மாணவர் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில்,“சிபிஎஸ்இ எனக்கு அளித்த இயற்பியல் விடைத்தாளின் நகல் வேறொரு மாணவருக்குரியது.

இதைக்கண்டு தான் நிலைகுலைந்து போனேன்” எனக் கூறி, விடைத்தாள்களை பகிர்ந்துள்ளார்.

வேதாந்த்தின் பதிவை சேர் செய்து, நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் சிபிஎஸ்இ-க்கு எதிராக குரல் எழுப்பினர்.

இதனால் பதற்ற மடைந்த சிபிஎஸ்இ இயற்பியல் தாளில் ஏற்பட்ட குளறுபடியை ஒப்புக்கொண்டதுடன், வேதியியல் விடைத்தாள் தொடர்பான தனிப்பட்ட புகார் (மற்றொரு சம்பவம்) ஒன்றையும் ஏற்றுக்கொண்டது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) வேதாந்திற்கு கடிதம் எழுதி, அவருடைய சரியான இயற்பி யல் விடைத்தாளை இணைத்து, அதற்கேற்ப அவரது தேர்வு முடிவு திருத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து திங்களன்று இரவு, வேதாந்த் சிபிஎஸ்இ-க்கு நன்றி தெரிவித்து சரியான விடைத்தாளின் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இருப்பினும், சரியான பதில்களுக்கும் மதிப் பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை உன்னிப்பாகப் பரிசோதித்த பிறகு மீண்டும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கப் போவதாகவும் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.