டிஜிட்டல் விடைத்தாள் திருத்தும் முறையால் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததா?
15 May 2026, 10:14 pm

டிஜிட்டல் விடைத்தாள் திருத்தும் முறையால் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததா?

நாகர்கோவில், மே 15 - சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறை, மாணவர்களின் மதிப்பெண் களைப் பாதித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு முதல், முறையாக விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, கணினித் திரை வழியாகவே ஆசிரியர்கள் திருத்தும் முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி யது.

இந்த முறை மிகவும் வெற்றிகரமானது என்றும், வெளிப்படைத்தன்மை கொண்டது என்றும் வாரியம் தெரிவித்தது.

வழக்கமாக ஒரு ஆசிரியர் ஒரு நாளில் 20 முதல் 25 விடைத்தாள்களை மட்டுமே திருத்த முடியும் நிலையில், புதிய முறையில் 30 விடைத்தாள்கள் வரை துல்லியமாகத் திருத்தப்பட்டதாக அதிகாரி கள் தரப்பில் கூறப்படுகிறது.

துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடிவு இருப்பினும், இந்த புதிய முறையினால் மாண வர்களின் மதிப்பெண்கள் குறைந்திருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கூறப் படுகிறது.

இது பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல இடங்களில் விடைத்தாள்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படவில்லை என்றும், கணினித் திரையில் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததால் சரியாக மதிப்பீடு செய்ய முடிய வில்லை என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சில விடைத்தாள்கள் மொபைல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டதைப் போல தரம் குறை வாக இருந்ததாகவும், இதனால் மறுமதிப்பீட் டிற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோல்வியடைந்த அல்லது மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 15 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒ

ரு பாடத்தில் தோல்வி யடைந்தவர்கள் அல்லது ஒரு பாடத்தில் மதிப் பெண்ணை உயர்த்த விரும்புபவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

கடந்த ஆண்டு தோல்வியடைந்த மாணவர்களுக்கும் இதுவே இறுதி வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் சிபிஎஸ்இ தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஒவ்வொரு பாடத்திலும் மிகச்சிறப் பாகச் செயல்பட்டு முதல் 0.1 சதவிகித இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு ‘மெரிட் சான்றிதழ்’ டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 94 ஆயி ரத்து 028 மாணவர்கள் (5.32 சதவிகிதம் பேர்) 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்களையும், 17 ஆயிரத்து 113 மாணவர்கள் (0.97 சதவிகிதம் பேர்) 95 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்களை யும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.