கரூர் கூட்ட நெரிசல் வழக்கு த.வெ.க. நிர்வாகியிடம் சி.பி.ஐ. விசாரணை
9 Nov 2025, 2:37 pm
<p><strong>கரூர் கூட்ட நெரிசல் வழக்கு த.வெ.க. நிர்வாகியிடம் சி.பி.ஐ. விசாரணை</strong></p>
<p>கரூர், நவ. 9 - கரூரில் கடந்த செப்.27 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார கூட்டத் தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பிரச் சாரத்தின்போது பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீ சார் சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். கடந்த நவ.6, 7 ஆம் தேதிகளில் 17 தனியார் ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. சனிக்கிழமை மீண்டும் ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்கள் என 8 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த நவ.3 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவல கத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்று, கரூரில் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சி பதிவுகளை ஒப்படைக்க வேண் டும் என சம்மன் அளித்திருந்தனர். இதையடுத்து, த.வெ.க. வழக் கறிஞர் அரசு, சென்னை பனையூர் அலுவலக த.வெ.க. நிர்வாகி குரு சரண் உள்பட 3 பேர் சனிக்கிழமை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து, விஜய் யின் பிரச்சார வாகனத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் உள்ளிட்ட ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரண்டாவது நாளாக ஞாயிறன் றும் குரு சரண் சி.பி.ஐ. முன்பு ஆஜ ராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட் டார். விஜய்யின் பிரச்சார வாகன காட்சிகள் தொடர்பாக அவரிடம் விரி வான விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.</p>
