தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் 41 பேர் பலியான துயரம் விஜய் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன்!

6 Jan 2026, 3:29 pm
கரூரில் 41 பேர் பலியான துயரம் விஜய் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன்!
<p><strong>கரூரில் 41 பேர் பலியான துயரம் விஜய் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன்!</strong></p> <p>சென்னை, ஜன. 6 - கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, தமிழக வெற்றிக் கழ கத்தின் தலைவர் விஜய்க்கு, மத்திய புலனாய்வுத் துறை (CBI) சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகி னர். இதுதொடர்பாக, உச்ச நீதி மன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே தவெக நிர்வாகிகள், தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகரிகள், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அண்மையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் தலைமைப் பொதுச்செய லாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் &nbsp;பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதி யழகன் ஆகியோரை, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவ லகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். கரூர் மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், கரூர் மாவட்டக் கண் காணிப்பாளர் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடமும் சிபிஐ தில்லி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அதற்கான காரணம் என்ன? எந்த அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டன. இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜனவரி 12 அன்று, நேரில் ஆஜராகுமாறு, தவெக தலைவர் விஜய்-க்கும் சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.