முந்தய பக்கம்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு சிபிஐ சம்மன்!

6 Jan 2026, 11:59 am
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு சிபிஐ சம்மன்!
<p>கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.<br /> கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.<br /> இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.<br /> இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணைக்காக வரும் ஜனவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram