முந்தய பக்கம்

காவிரி நதி நீர் விவகாரம் : தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல்!

13 Aug 2026, 9:12 pm
காவிரி நதி நீர் விவகாரம் : தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல்!

காவிரி நதி நீர் விவகாரம் : தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல்!

சென்னை, ஆக. 13 -காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் பதில் மனுவைத் தொடர்ந்து, கர்நாடக அரசு கூடுதல் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மனுக்களும் வரும் திங்கள்கிழமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.

ஆகஸ்ட் 12 முதல் 31 வரை தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் விநாடிக்கு 21,413 கன அடி நீர் திறக்கஉத்தரவிட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் பற்றாக்குறை 15.278 டி.எம்.சி.யும், விகிதாச்சார நீர் 21.357 டி.எம்.சி.யும் சேர்ந்து மொத்தம் 36.635 டி.எம்.சி நீர், ஆகஸ்ட் 31-க்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12-க்கு முன் கர்நாடகம், நீரைத் திறந்திருந்தால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 60 டி.எம்.சி.யாகஉயர்ந்திருக்கும் என்றும், அது நடைபெறாததால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர் சாகுபடிக்காககாத்திருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக கர்நாடகா திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழகஅரசு கோரியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram