தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிமையை நிலைநிறுத்த ஒன்றுபடுத்துவது அவசியம்

2 Aug 2026, 9:29 pm
உரிமையை நிலைநிறுத்த ஒன்றுபடுத்துவது அவசியம்

உரிமையை நிலைநிறுத்த ஒன்றுபடுத்துவது அவசியம்

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு25ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியோ, ஆணையத்தின் உத்தரவுப்படியோ கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிடவில்லை. மாறாக, கனமழைகாரணமாகவும் அந்த மாநிலத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டும்தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை அங்கீகரிக்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரியின் வடிகால் பகுதியாகவே தமிழ்நாட்டை கர்நாடகத்தை ஆண்ட, ஆளும், அரசுகள் கருதுகின்றன. இப்போதும் அதுதான் நடந்துள்ளது.

பாசனப் பகுதிக்கு வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அணை வறண்டு கிடந்ததால் இந்த ஆண்டு தண்ணீர் குறிப்பிட்டநாளில் திறக்கப்படவில்லை. இதனால் பெரும்பகுதி குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துவிட்டது. விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது மட்டுமின்றி, உணவு தானிய உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

மறுபுறத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காவிரி நீர் விவசாயத்திற்கு மட்டுமின்றி கூட்டுக் குடிநீர்திட்டங்கள் மூலமாக குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. நீண்டநெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகே காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டது. தொடர்ந்து சட்டப்போராட்டம்நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுபேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. இது பலனளிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்படபல்வேறு கட்சிகள் சுட்டிக்காட்டின. எனினும்முதல்வர் தலைமையிலான குழு செல்லப்போவதாக கூறப்பட்ட நிலையில், இப்போதைய சூழலில் தமிழக முதல்வர் கர்நாடகம் வருவது உகந்ததல்ல என கர்நாடக முதல்வரும் கைவிரித்துவிட்டார். அந்தமாநிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் உட்பட நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என்ற நிலையை எடுப்பதுபொருத்தமல்ல, அனைத்துக் கட்சி கூட்டத்தின் மூலம் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்துவ தற்கு ஒன்றிய அரசிற்கு அழுத்தம் தர முடியும்.உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது பொருத்தமானது. அதே நேரத்தில் கடந்த காலத்தைப் போன்றுதமிழ்நாட்டு மக்களின் கருத்தை அனைத்துக் கட்சி கூட்டத்தின் மூலம் ஒருங்கிணைப்பதும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதும் அவசியம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.