காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல்</strong></p>
<p>தருமபுரி, ஜன.31- தருமபுரி மாவட்ட மக்களின் பல நாள் கோரிக்கையான, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளதாக, விவசா யிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சி யர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில், மாவட்ட விவ சாயிகளின் நீண்ட கால கோரிக்கை யாக உள்ள மழை, வெள்ளக்காலங் களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரை, தருமபுரி மாவட்டத்தி லுள்ள ஏரிகளுக்கு கொண்டு செல் லும் உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். பொதியன்பள் ளம் அணைக்கட்டிலிருந்து ஏரிக ளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், வாணியாறு நீரேற்றும் திட் டம், தும்பலஅள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் எண் ணேகொள்புதூரிலிருந்து தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டம் ஆகிய கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்க வேண்டும். அதேபோல இத்திட்டங்களை விரைந்து நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தி னர். இதற்கு ஆட்சியர் ரெ.சதீஷ் பதி லளித்து பேசுகையில், காவிரி ஆற் றில் மழை வெள்ளக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை மாவட் டத்திலுள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் சாத்தியக் கூறு கள் குறித்து ஆராயப்பட்டது. இதில், நீரேற்றும் திட்டம் மூலம் இதை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்ற னர். ஆனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நிலவியல் அமைப்பு இதற்கு பாதிப்பாக உள்ளது. ஏனெ னில், மாவட்டத்தின் சம நிலபரப் பில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆறு சுமார் 250 அடி ஆழத்தில் செல்கிறது. இந்த வேறுபாடு கார ணமாக நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஆய் வில் தெரியவந்துள்ளது. எனவே, இதில் பொருள் செலவு கூடுதலா கும் என்பதை தவிர, ஆற்றுநீரை ஏரி களுக்கு தண்ணீர் கொண்டுவர இய லாத நிலைதான் ஏற்படும். அதே நேரத்தில் ஓரளவுக்கு ஆழம் குறை வான நிலையில் செல்லும் காவிரி ஆற்றின் பகுதியில் இருந்து சாத் தியமுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல் படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாணியாறு நீரேற்றும் திட்ட மும் இதேநிலையில் தான் உள்ள தாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதி யன்பள்ளம் அணைக்கட்டிலிருந்து அருகிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சாத்திய முள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக் கப்படும். தும்பலஅள்ளி இணைப் புக் கால்வாய் திட்டம் உள்ளிட்ட மற்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறை வேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன, என்றார். தொடர்ந்து, நில வழி காட்டுதல் மதிப்பின்படியே ஆவ ணங்களை சாா்பதிவாளர் அலுவ லங்களில் பதிவுசெய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலி அதிகமாக உள்ள தால் விவசாயிகள் பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர். இதைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு செல்லும் பகுதியில் அமைக்கப்படும் சாலைகளை அருகில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்த தடைசெய்து கட்டப் படும் சுற்றுச்சுவர்களை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.</p>
