விபத்தை ஏற்படுத்தும் காவிரி ஆற்று மேம்பாலம்!
8 Dec 2025, 4:39 pm
<p><strong>விபத்தை ஏற்படுத்தும் காவிரி ஆற்று மேம்பாலம்!</strong></p>
<p>நாமக்கல், டிச.8- விபத்தை ஏற்படுத்தும் காவிரி ஆற்று மேம்பாலத்தை விரைவில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நாமக்கல் மாவட்டத்தின் எல்லை யோர பகுதியாக பள்ளிபாளையம் அமைந்துள்ளது. மேலும் பள்ளி பாளையத்திலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வகையில் காவிரி ஆற்றின் நடுவே இரண்டு பாலங்கள் உள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட காவிரி ஆற்று பழைய பால மும், கடந்த அதிமுக ஆட்சி காலத் தில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் என இரண்டு பாலங்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலங்களாக இவை விளங்கி வரும் நிலையில், தினம் தோறும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், வேலைக்கு செல்வோர், கனரக வாகனங்கள், பேருந்துகள் என பல்லாயிரக்கணக் கான வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே சென்று வருகிறது. தற்போது பள்ளிபாளையத்திலிருந்து திருச் செங்கோடு சாலை வரை மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மேம் பாலம் அமைக்கப்பட்ட நிலையில், அந்த பாலத்தின் மேலே அதிகளவு வாகனங்கள் சென்று வருகிறது. இந் நிலையில் பள்ளிபாளையத்திலி ருந்து ஈரோட்டை இணைக்கும் வகை யில் அமைந்துள்ள காவிரி ஆற்று மேம்பாலத்தின் பல்வேறு இடங்க ளில் விரிசல் ஏற்பட்டும், பழுதடைந்த நிலையிலும் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளிபாளையத்தி லிருந்து ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் பாலத்தின் ஈரோடு முனை பகுதி அருகே பாலத்தின் இணைப்பு பகுதியில் மிகப் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு, கன மான கம்பிகள் வெளியே துருத்திக் கொண்டுள்ளது. இதன் காரண மாக அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் சென்று விபத்தில் சிக்கி உள்ளனர். மேலும் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆங் காங்கே ஆலமர விழுதுகள் அதிக ளவு படர்ந்து உள்ளது. எனவே நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை யினர் காவிரி ஆற்று புதிய மேம் பாலத்தை உடனடியாக ஆய்வு மேற் கொண்டு, குண்டும் குழியுமாக காணப்படும் இடங்களை சீரமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
