காவிரி ஆற்றில் மீண்டும் சாயக்கழிவுநீர் கலப்பு? ஆய்வுடன் நிற்காமல் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
12 May 2026, 12:19 am

காவிரி ஆற்றில் மீண்டும் சாயக்கழிவுநீர் கலப்பு? ஆய்வுடன் நிற்காமல் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

நாமக்கல், மே 11- பள்ளிபாளையத்தில் சாயக்க ழிவு நீர் காவிரி ஆற்றில் நேரடி யாக கலப்பதாக சமூக வலைத்த ளங்களில் வீடியோ வெளியாகி யுள்ள நிலையில், அதிகரிகள் சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஆய்வு டன் நிற்காமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

விசைத்தறி தொழில் நிறைந்த மாவட்டமாக நாமக்கல் உள்ளது. ப

ள்ளிபாளையம், குமாரபாளை யம் பகுதிகளில் பல்லாயிரக்கணக் கான விசைத்தறிக் கூடங்கள் உள் ளன.

இத்தொழிலில் நேரடியாக வும், மறைமுகமாகவும் பல லட் சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து ஜவுளித்தொழில் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந் நிலையில்,

ஜவுளி உற்பத்திக்கு மிகவும் முக்கியமாக இருக்கக் கூடிய ஜவுளி நூல்களுக்கு சாயம் ஏற்றும் சாய ஆலைகள் 200க்கும் மேற்பட்டவை குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் செயல் பட்டு வருகின்றன.

அரசின் சட்ட விதி களோடு சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் கலக்காமல் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஏரா ளமான சாய ஆலைகள் முறையாக இயங்கி வருகின்றன.

ஆனால், பல் வேறு இடங்களில் அரசின் விதி களை கடைப்பிடிக்காமல் சுத்திக ரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் நேரடியாக கலக் கும் வகையில் சாக்கடை கால்வாய் வழியே சில சாய ஆலை உரிமையா ளர்கள் அவ்வப்போது திறந்து விடு கின்றனர்.

இதன் காரணமாக காவிரி நீர் பயன்படுத்த முடியாத அள விற்கு மாறியுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதும், அது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி கள் மூலமாக தெரிய வந்தது.

அதி காரிகள் ஆய்வு செய்வதும் வழக்க மான ஒன்றாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் சுத்திகரிப்பு செய்யப்படா மல் சாயக்கழிவு நீர் காவிரி ஆற் றில் நேரடியாக இரவிலும், பட்டப் பகலிலும் கலப்பதாக சமூக ஆர்வ லர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்திருந்தனர்.

இதனடிப்படை யில் திங்களன்று பள்ளிபாளையம் பகுதிக்கு வருகை தந்த வருவாய் கோட்டாட்சியர் லெனின், குமார பாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கும் பல்வேறு சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப் பொழுது சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை வெளியேற்றியதாக சீல் வைக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அவை மீண்டும் இயங்கு கிறதா என ஆய்வு மேற்கொண்ட னர்.

தொடர்ந்து சாயக் கழிவு நீர் விவ காரம் பெரிதாகும் போது அதிகாரி கள் உடனுக்குடன் வந்து ஆய்வு செய்வதும் அதன் பின் கண்டும் காணாமல் இருக்கும் நடைமுறை அதிகளவு உள்ளதால், இது குறித்து நிரந்தர தீர்வை ஏற்படுத் தும் வகையில் அதிகாரிகள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமி ழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர் கள் மற்றும் பொதுமக்களின் எதிர் பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.