காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா
15 Jun 2026, 11:56 pm
<p><strong>காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா</strong></p><p>கோவை, ஜூன் 15- காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ புற்று மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று ஸ்ரீ புற்று மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கே. நாராயணசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எஸ்.தங்கபாண்டி வரவேற்றார். செயலாளர் கே.அருணகிரி ஆண்டறிக்கையையும், பொருளாளர் எம்.விஜயராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சங்க நிர்வாகிகள் ஜெ. ஜெயந்தி, யு. நிஷா, ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு 55-வது வட்ட மாமன்ற உறுப்பினர் அன்பு (எ) தர்மராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரக் குழு செயலாளர் ஆர்.மூர்த்தி, நகரக் குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் வி.ஜெகதீசன், சோபனா செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத்தின் தணிக்கையாளர் பி.வி.சுரேஷ்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
