முந்தய பக்கம்

காவிரி, மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றமே இறுதி நம்பிக்கை!

2 Aug 2026, 2:29 am
காவிரி, மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றமே இறுதி நம்பிக்கை!

காவிரி, மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றமே இறுதி நம்பிக்கை! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி

சென்னை, ஆக. 1 -மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகள், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்சநீதிமன்றம் மட்டும்தான் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளில் சம்பந்தப் ட்ட மாநில அரசுகளால் மட்டுமே எதையும் செய்துவிட முடியாது என்றும், இதில்ஒன் றிய அரசுதான் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.மாநிலங்களுக்கு இடையேயான இதுபோன்ற நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அணை நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை ஒன்றிய அரசேநேரடியாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து நடத்த வேண்டும் என்றார்.நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்குத் தற்போதிருக்கும் ஒரே நம்பிக்கைக்குரிய தீர்வு உச்ச நீதிமன்றத்தைநாடுவதுமட்டும்தான் என்று உறுதிபடக் கூறிய அவர், “அனைத்து கட்சி கூட்டம் குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram