ராணிப்பேட்டை சாலைகளில் கால்நடைகள் ஆக்கிரமிப்பு
10 Dec 2025, 4:08 pm
<p><strong>ராணிப்பேட்டை சாலைகளில் கால்நடைகள் ஆக்கிரமிப்பு</strong></p>
<p>ராணிப்பேட்டை, டிச.10- ராணிப்பேட்டை நகராட்சி சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அதிக அளவில் கால்நடைகள் சுற்றித் திரிவதும் இரவு நேரங்களில் ஓய்வெடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையில் நடமாடும் மாடு, நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இருளில் சாலையின் நடுவே நிற்கும் மாடுகளை உடனடியாக கண்டறிவது கடினமாக இருப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
