தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதியக் கோர முகம்

12 Jun 2026, 8:35 pm
சாதியக் கோர முகம்

சாதியக் கோர முகம்

சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நவீன காலத்திலும், சாதிய வெறி மனிதத்தன்மையற்ற முறையில் அரங்கேறி வருவது மிகுந்த வேத னையளிக்கிறது. உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் கேதன் லால் என்ற 18 வயது இளைஞர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மற் றொரு தலித் இளைஞர் என, சாதியக் கட்ட மைப்புக்கு எதிராகத் தங்கள் காதலை முன்னி றுத்தியதற்காக இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரகண்டில் நடந்த சம்பவம் ஒரு சாதார ணக் குற்றமல்ல; அது ஒரு காட்டுமிராண்டித்தன மான வன்முறை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், ‘உயர்’ சாதிப் பெண்ணைக் காத லித்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் திட்டமிட்டு வர வழைக்கப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். நகங்களை அகற்றுவது, ஆணி களை கையில் குத்துவது போன்ற கொடூரமான தாக்குதல்கள், மனித நேயம் என்பது எவ்வளவு தூரம் சிதைந்து போயிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

இதே காலகட்டத்தில் உ.பி.யில் காதல் ஜோடி தீவைத்துக் கொல்லப்பட்டது, சாதியக் கட்டுமா னங்கள் காதலை எத்தகைய அச்சத்தோடு பார்க் கின்றன என்பதையும், சாதி மறுப்புத் திரு மணங்களுக்கு எதிராக இந்தச் சமூகம் எவ்வளவு வன்முறையான எதிர்வினையாற்றுகிறது என் பதையும் காட்டுகிறது. சாதி என்பது ஒரு சமூக அடையாளம் மட்டுமல்ல, அது ஒருவரின் உயி ரைப் பறிக்கும் ஆயுதமாகவும் மாறியிருப்பது ஆபத்தான போக்கு. இத்தகைய கொடூரங்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கடந்து செல்லக் கூடியவை அல்ல; இவை சமூகத்தின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கும் சாதிய நஞ்சின் வெளிப்பாடுகள்.

நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறையின் நட வடிக்கைகள் இந்த வழக்குகளில் மிகக் கடுமை யானதாக இருக்க வேண்டும். இந்திய நீதிச் சட்டம் மற்றும் ‘எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப் பட்டிருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதி ரான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குக ளில் விரைந்து நீதி கிடைக்க சிறப்பு நீதிமன்றங் களை ஏற்படுத்த வேண்டும். துரிதமான விசா ரணை மற்றும் தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முதல் படியாக அமையும்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு அமைதி காப்பது, இந்தச் சமூகத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் விடுக் கப்படும் சவாலாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு உரிய நீதி கிடைப்பதும், சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பு வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி யற்ற, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்கு வதே இந்த இளைஞர்களின் மரணத்திற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். நீதியை நிலை நாட்டுவதிலும் சாதிய வன் முறையை வேரறுப்பதிலும் அரசும் காவல் துறையும் உறுதியாக இருக்கவேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.