தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள பல்கலை.யில் சாதி வன்கொடுமை : டீனை நீக்கக் கோரி எஸ்எப்ஐ முற்றுகை

13 Nov 2025, 3:30 pm
கேரள பல்கலை.யில் சாதி வன்கொடுமை : டீனை நீக்கக் கோரி எஸ்எப்ஐ முற்றுகை
<p><strong>கேரள பல்கலை.யில் சாதி வன்கொடுமை : டீனை நீக்கக் கோரி எஸ்எப்ஐ முற்றுகை</strong></p> <p>திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தில் சாதி வன்கொடுமை தொ டர்பாக பல்கலைக்கழக தலைமையகத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். சாதி வன்கொடுமை செய்த டீன் சி.என். விஜயகுமாரியை நீக்கக் &nbsp;கோரி அவரது வாகனத்தை முற்றுகை யிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சனையில் நிதான மான அணுகுமுறையை எடுத்த பல் கலைக்கழக துணைவேந்தர் மோகனன் குந்நும்மலை எஸ்எப்ஐ ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். துணைவேந்தர் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்து கிறார் என்றும் மாணவர் பிரச்சனை களில் தலையிடத் தயாராக இல்லை என்றும் எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் எம்.சிவபிரசாத் கூறினார். புதனன்று காலை பல்கலைக்கழக தலைமையகத்தில் நடைபெற்ற செனட் கூட்டத்தில் விஜயகுமாரி கலந்து கொண்டபோது இடதுசாரி சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகைகளை ஏந்தி டீனுக்கு, சிண்டி கேட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். செனட் கூட்டத்தில் இருந்து விஜய குமாரியை நீக்க வேண்டும் என்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கோரினர். டீன் மீது நடவடிக்கை எடுக்கப் படும்வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று இடது சாரி சிண்டிகேட் உறுப்பினர்கள் தெளிவு படுத்தினர். இருப்பினும், இந்த விவ காரத்தில் ஒரு முடிவை எடுக்க துணை வேந்தர் மோகனன் குந்நும்மல் தயாராக இல்லை. கேரள பல்கலைக்கழகத்தில் சாதிப் பாகுபாட்டை எதிர்கொண்டதாக விபின் விஜயன் அளித்த புகாரின் பேரில், டீன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். காரியாவட்டம் வளாகத்தில் உள்ள சமஸ்கிருதத் துறைத் தலைவரான சி.என். விஜயகுமாரி மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 3(1) ஆர் மற்றும் &nbsp;எஸ் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவரான விபின் அளித்துள்ள புகாரில், பிஎச்டி ஓப்பன் டிபன்ஸ் அறிக்கையில் கையொப்ப மிட்டு வழங்க முடியாது என்று கூறிய தாகவும், மற்ற ஆசிரியர்கள் மற்றும் வழி காட்டிகள் முன்னிலையில் தனது சாதி யைச் சொல்லி அவரை அவமதித்த தாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆசிரியரின் அதிகா ரப்பூர்வ அறைக்குள் நுழைந்ததால், அறை அசுத்தமாகி விட்டதாகக் கூறி தண்ணீரை தெளிப்பதாகவும் இது மாணவருக்கு மன உளைச்சலை ஏற் படுத்தியுள்ளதாகவும் புகார் கூறு கிறது. அக்டோபர் 10 ஆம் தேதி காரியா வட்டம் வளாகத்தில் விபினின் பிஎச்டி மீதான திறந்த விவாதம் நடைபெற்றது. குழுத் தலைவர் அனில் பிரதாப் கிரி அவரை பிஎச்டிக்கு பரிந்துரைத்த போதிலும், டீன் விஜயகுமாரி இதை எதிர்த்தார். பின்னர் மாணவருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று அவதூறு பரப்பப்பட்டது. இதற்கு எதிராக ஆய்வு மாணவர் துணைவேந்தரிடம் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. காவல்துறை, உயர் கல்வி அமைச்சர் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி யினர் ஆணையத்திடம் புகார் அளிக் கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஆர்.பிந்து பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.