சாதி ஆணவக் கொலைகள் இனியும் தொடரக் கூடாது! கே.என்.பாஷா ஆணையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>சாதி ஆணவக் கொலைகள் இனியும் தொடரக் கூடாது! கே.என்.பாஷா ஆணையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்</strong></p>
<p>பெ.சண்முகம் வலியுறுத்தல் சென்னை, நவ.15 - சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற பரிந்துரை வழங்க, நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அரசு ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா ஆகியோரின் சாதி மறுப்புத் திரு மணம் காரணமாக, சுபாஷின் தந்தை தண்டபாணி, சுபாஷ் மற்றும் தடுக்க வந்த அவரது தாயார் கண்ணம்மாளைப் படுகொலை செய்தார். அனுசுயா படுகா யங்களுடன் உயிர் தப்பினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தண்ட பாணிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தச் சூழலில், வழக்கை நடத்தத் துணை நின்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலா ளர் பி. சுகந்தியுடன், அனுசுயா மார்க்சி ஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத் திற்கு வந்து மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தைச் சந்தித்து நன்றி தெரி வித்தார். அப்போது அனுசுயாவுக்கும் பி. சுகந்திக்கும் பெ.சண்முகம் பாராட்டுத் தெரிவித்தார். ஆணையம் தாமதிப்பது வருத்தம் அளிக்கிறது பின்னர் செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பு கள் பல்லாண்டுகளாக சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி வருகின்றன. இரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோரு டன் நானும் முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆணையம் அமைக்கப் பட்டு ஒரு மாதமாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. சிறப்புச் சட்டம் இயற்று வதற்கான தேவையான பரிந்துரை களை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலை மையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறி ஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும்” என்று முதல்வர், சட்ட மன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு, பணிகள் துவங்க வேண்டும். அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் இந்தச் சட்டத்தின் தேவையை உணர்த்து கின்றன. எனவே, இந்தச் சட்டத்தை விரைந்து இயற்றத் தேவையான பரிந்து ரைகளை ஆணையம் துரிதமாக வழங்க வேண்டும். அனுசுயாவுக்கு விரைந்து அரசு வேலை வழங்கக் கோரிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்படியே அரசு வேலை வழங்க முடியும். ஆணவக் கொலையில் நீதி மன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும், சிபிஎம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகும், அரசு வேலை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அரசு சட்டப்படி யாக அனுசுயாவிற்குப் பொருத்தமான அரசு வேலையை விரைந்து வழங்க வேண்டும். மேலும், காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர் தங்குவதற்கு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். ஆணவக் கொலையைத் தடுப்பதும், பாதிக்கப்படுகிறவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமை. விமலா தேவி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பீகார் தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர். சர்ச்சை பீகார் தேர்தல் குறித்துப் பதிலளித்த அவர், “ஆளும் கட்சிக்கு எதிரான வாக்கு கள் சிதறியது, எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் (இதில் மகாகத்பந்தன் அணிக்கு வாக்க ளிக்கக் கூடிய சிறுபான்மையினர், பட்டிய லின மக்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டனர்) மற்றும் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகப் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் ஆகியவை என்.டி.ஏ. அணி வெற்றி பெறக் காரணங்களாக அமைந்தன” என்று விளக்கினார். இந்தத் தேர்தல் முடிவுகள் மதச்சார் பற்ற சக்திகளுக்குப் பின்னடைவு. இருப்பினும், வாக்கு சதவீத அடிப்படை யில் மகாகத்பந்தன் அணி கூடுதல் வாக்கு களைப் பெற்றுள்ளது. மக்களின் உணர் வுகளைப் பிரதிபலிக்கச் சம விகிதாச்சார தேர்தல் முறையை (Proportional Representation) மார்க்சிஸ்ட் கட்சி தொ டர்ந்து வலியுறுத்துகிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு 5-6 மாதங்கள் உள்ளன. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இணக்கத்தையும், ஒற்றுமை யையும் ஏற்படுத்தி உள்ளது. மதவெறி சக்திகளை எதிர்க்க நெருக்கமான உறவை மேலும் பலப்படுத்தும் தேவையை உணர்த்தி உள்ளது. பாஜக-அதிமுக அணியை முறியடிக்க அனைத்து வகை யான திட்டமிடல்களையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
