கூட்டுறவு கடை பெண் ஊழியருக்குச் சாதிய ரீதியான தொந்தரவு: பதிவாளர் அலுவலகத்தில் கணவர் புகார்!
20 May 2026, 1:16 am
<p><strong>கூட்டுறவு கடை பெண் ஊழியருக்குச் சாதிய ரீதியான தொந்தரவு: பதிவாளர் அலுவலகத்தில் கணவர் புகார்!</strong></p><p>திருவண்ணாமலை, மே 19- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளார் பகுதியில் வசிக்கும் ராஜாத்தி என்பவர், செய்யாறு வட்டத்தில் உள்ள ஆலத்தூர் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இந்த நிலையில், ஆலத்தூர் கூட்டுறவுச் சங்கத்தில் மற்றொரு விற்பனையாளராகப் பணியாற்றும் தீபா மற்றும் மேல் அதிகாரியான அன்புச்செல்வன் ஆகியோர், ராஜாத்தியைச் சாதி ரீதியாக இழிவாகப் பேசுவதும், செய்கைகளால் அவமதிப்பதும் தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜாத்தி மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி யுள்ளார். இதுகுறித்து ராஜாத்தியின் கணவர் சிவக்குமார் திங்க ளன்று திருவண்ணாமலை கூட்டு றவுத்துறை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, விதி முறைகளை மீறி முறைதவறிச் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் அலுவலக அதிகாரி உறுதி அளித்தார். மனு அளிக்கப்பட்ட இந்த நிகழ்வின் போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராம தாஸ், மாவட்ட பொருளாளர் குபேந்திரன், வழக்கறிஞர் எஸ். அபிராமன், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டப் பிரதிநிதி ஆர்.ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
