நவபாரத் பள்ளி ஆண்டு விழாவில் சாதி ஒழிப்பு கலை நிகழ்ச்சிகள்
4 Mar 2026, 5:01 pm
<p><strong>நவபாரத் பள்ளி ஆண்டு விழாவில் சாதி ஒழிப்பு கலை நிகழ்ச்சிகள்</strong></p>
<p>சென்னை, மார்ச் 4- சென்னை தி.நகரில் உள்ள நவபாரத் மெட்ரி குலேஷன் பள்ளியின் ஆண்டு விழா புதனன்று (மார்ச் 4)சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலைத்திறனையும் சமூக விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் வித மாக அமைந்த இந்த விழா வினை, பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன் நீலேஷ் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்ற இந்த விழாவில், வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கான பல்வேறு கருத்துச் செறிந்த நிகழ்ச்சிகள் மேடை யேற்றப்பட்டன. குறிப்பாக, 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் இணைந்து வழங்கிய ‘சாதி மறுப்பு கும்மி நடனம்’ பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. அத்துடன் ஒயிலாட்டம், கிராமிய நடனம் மற்றும் நாடகங்கள் வழியாகத் தாய் மண்ணைப் போற்றுதல், இயற்கையைப் பாது காத்தல் மற்றும் கூடி வாழும் பண்பு ஆகிய உயரிய கருத்துக்களை மாணவர்கள் வலியுறுத்தி னர். விழாவின் நிறைவாக மாணவி கிளாரா பென்னியா நன்றி கூறினார். மாண வர்களின் சமூக அக்கறை யுடன்கூடிய இந்த கலை நிகழ்ச்சிகளை விழாவில் பங்கேற்ற பெற்றோர்களும் ஆசிரியர்களும் வெகு வாகப் பாராட்டினர்.</p>
<p> </p>
