தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடஒதுக்கீட்டை குறிப்பிட்டு தலித் மாணவருக்கு மிரட்டல் ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலும் சாதிப் பாகுபாடு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

22 Sept 2026, 10:26 pm
இடஒதுக்கீட்டை குறிப்பிட்டு தலித் மாணவருக்கு மிரட்டல்  ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலும் சாதிப் பாகுபாடு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

இடஒதுக்கீட்டை குறிப்பிட்டு தலித் மாணவருக்கு மிரட்டல் ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலும் சாதிப் பாகுபாடு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

அலகாபாத்பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ஒருவர் பி.ஏ. எல்.எல்.பி. (BA LLB Hons.) பயின்று வருகிறார்.இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவரும், மாணவர்கள் விடுதிக்காப்பாளருமான பேராசிரியர் ஒருவர், தன்னை அவமானப்படுத்துவதற்கும் பழிவாங்குவதற்கும் சாதியை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக ஆகஸ்ட் 20 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் உஷா டாண்டனிடம் தலித் மாணவர் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பேராசிரியர் கூறிய கருத்துகளைத்தலித் மாணவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் ‘அரசியலமைப்புச் சட்டம் - I’ (Constitutional Law - I) தேர்வில்பல்கலைக்கழகத்திலேயே மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். இதனை மனதில்கொண்டுதான், அந்தப் பேராசிரியர் நான்காம் பருவத்தின் தொடக்கத்தில், ‘இப்போது எனதுபாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கட்டும் பார்ப்போம்’ என்று மிரட்டும் நோக்கில் மாணவர்கள் முன்னிலையில் சவால் விடுத்தார். மேலும், ‘நீதான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாயிற்றே, உனக்கு ஏன் இடஒதுக்கீடு?’ என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, எனது விடைத்தாள்களும் மிகவும்கடுமையான முறையில் திருத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றநீதிபதி வினோத் திவாகர் அடங்கிய தனிநபர் அமர்வு, “தலித் மாணவரின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை;வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எனவே, அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அர்ச்சனா சிங், அலகாபாத்சிறப்பு முதன்மை நீதித்துறை நடுவர் அருண் குமார் யாதவ் ஆகியோர் அடங்கிய குழு சுதந்திரமாக விசாரணைநடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளின் காரணமாக மாணவர்கல்வி அல்லது நிர்வாக ரீதியாக எந்தப் பாதிப்பையும் எதிர்நோக்கக் கூடாது என்பதைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக,ஐந்தாம் பருவம் படிக்கும் அம்மாணவரின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஒரு சுதந்திரமான குழுவை உருவாக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைநிறைவடையும் வரை, அந்தத் துறைத் தலைவர் தனது அனைத்து நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படவேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த வழக்கு செப்டம்பர் 16 அன்று விசாரிக்கப்பட்டது. கடந்த வாரம் மும்பை ஐஐடி-யில் 20 வயது தலித் மாணவர் சாதிப் பாகுபாடு காரணமாக உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டாக்டர்ராஜேந்திர பிரசாத் தேசியசட்டப் பல்கலைக்கழக வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. (குறிப்பு: மாணவர் - பேராசிரியர் பெயர் குறித்து தெளிவான தகவல் இல்லை)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.