சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்
20 Mar 2026, 2:55 pm
<p><strong>சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள் ளியன்று சாதி மறுப்பு திரு மணம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள்ளியன்று சக்ர வர்த்தி – கீர்த்தி ஆகியோரின் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டப் பொருளாளர் மா.அண்ணா துரை தலைமை வகித்தார். கட்சியின் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில உதவித்தலை வர் பி.பி.பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தர ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா மற்றும் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி, உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி யாற்றுவோர் பலர் கலந்து கொண்டனர்.</p>
