சாதிய தாக்குதலில் காயமடைந்த முருகனுக்கு தீஒமு நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல்
29 Sept 2026, 1:36 am

சாதிய தாக்குதலில் காயமடைந்த முருகனுக்கு தீஒமு நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல்

கோவை, செப்.28-உடைகளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த முருகன் என்பவர், சாதிய அடிப்படையிலான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகில் உள்ள உடைகளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவரால் சாதிய கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார். தனது வலது கை துண்டாக்கப்பட்டு, தலையில் வெட்டுப்பட்டு 14 தையல்கள் போடப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை திங்களன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், குடும்பத்தினருக்கு தங்களது இயக்கத்தின் ஆதரவை தெரிவித்ததுடன், தொடர்ந்து துணை நிற்பதாக கூறி நம்பிக்கை அளித்தனர்.இந்த சந்திப்பில் ததீஒமு மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், பொருளாளர் பி.சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் கே.ரத்தினகுமார், மாவட்ட துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.