தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” - * பேரா.க. கணேசன், கொட்டாரம்

4 Jul 2026, 9:14 pm
“சாதியெனும் தாழ்ந்தபடி  நமக்கெல்லாம் தள்ளுபடி” - * பேரா.க. கணேசன், கொட்டாரம்

“சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” - * பேரா.க. கணேசன், கொட்டாரம்

“சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை வரியைக் கையிலேந்தி மாணவ மாணவியரிடையே கருத்துப் பவனி வர பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா.க.கணேசன், புலவர் பழநிச்சாமி, தோழர் வே.மணி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான சாதி ஒழிப்புக் கும்மிப் பாடல் இது. பள்ளிகளில் இலக்கிய மன்றங்களிலும், பொதுச் சமூக-சமத்துவ விழிப்புணர்வு கொண்ட பொதுவெளி நிகழ்வுகளிலும், கல்லூரி கலை மன்றங்களிலும் பவனி வரவேண்டிய மக்கள் இயக்கத்திற்கு உரித்தான கும்மிப்பாடல் இதோ.....

தன்னன னாதினம் தன்னானே-தனம் தன்னன னாதினம் தன்னானே தன்னன னாதினம் தன்னானே-தனம் தன்னன னாதினம் தன்னானே கும்மியடி தமிழ்நாடு முழுவதும் அன்பு ததும்பிட கும்மியடி நம்மைப் பிடித்த சாதிகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி நன்மை கண்டோமென்று கும்மியடி (கும்மியடி) சாதியால் மனிதரை கூறுபோட்ட வன்குணம் கொண்டவர் மாய்ந்துவிட்டார் பிறப்பைவைத்து மக்களைப் பிரிக்க முனைந்த மனிதர் தலைகவிழ்ந்தார் முனைந்த மனிதர் தலை கவிழ்ந்தார் (கும்மியடி) பேதத்தை வளர்த்த சாதியை ஒழித்து சமத்துவம் காண கூடிவந்தோம் மனிதருக்குள்ளே உயர்வுதாழ்வு இல்லையென்று சொல்லி கும்மியடி இல்லையென்று சொல்லி கும்மியடி (கும்மியடி) பள்ளிக்கு வந்தோம் படிக்கவந்தோம் படித்ததால் தெளிவு பெற்று வந்தோம் பெற்ற தெளிவினை பெற்றோருக்கும்-ஊரில் சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம்-ஊரில் சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம் (கும்மியடி) பெண்ணும் ஆணும் சரிநிகரென்று கற்றதை இங்கு சொல்ல வந்தோம் ஒன்றுபட்டு வாழ்ந்திடவேயிங்கு அன்பையும் அறிவையும் வளர்க்கவந்தோம் அன்பையும் அறிவையும் வளர்க்க வந்தோம் (கும்மியடி) கூடிவந்தோம் சிறார் கூடிவந்தோம் கோடிக்கரங்களி ணைந்து வந்தோம் கற்கவேண்டிய கல்வியை நாங்கள் கற்று இங்கே நிதம் கூடிவந்தோம் கற்று இங்கே நிதம் கூடிவந்தோம் (கும்மியடி) சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மோதல்க ளெங்கும் நடக்க விடோம் புவிதனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமென்று உரக்கச் சொல்லி கும்மியடி- சேர்ந்து உரக்கச் சொல்லி கும்மியடி (கும்மியடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.