சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்
30 Nov 2025, 4:29 pm
<p><strong>சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்</strong></p>
<p>திருப்பூர், நவ.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் அலுவலகத்தில் ஞாயிறன்று சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், சின்ன மருதூரைச் சேர்ந்த கே.மனோகரன் என்பவருக்கும், மாயனூரைச் சேர்ந்த ஹரிஷ்மா என்பவருக்கும் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சீனிவாசன் மாலை எடுத்துக் கொடுக்க, இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டனர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீ.டி.அழகர், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.</p>
