நோய் தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
28 Jun 2026, 2:08 am
<p><strong>நோய் தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை</strong></p><p>தருமபுரி, ஜூன் 27- மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பல்வேறு நோய்கள் தாக்கியதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, காரிமங்கலம், கம்பைநல் லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பள வில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. 7 முதல் 10 மாதங் களுக்குள் அறுவடை செய்யக் கூடிய, அதிக மகசூல் தரும் குல ராமன் ரக மரவள்ளிக்கிழங்கு அதிக ளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ரகம் நல்ல வளர்ச்சி, அதிக எடை கொண்ட கிழங்குகள் மற்றும் ஏக்கருக்கு சராசரியாக 15 டன் வரை மகசூல் தரக்கூடியது. பொது மக்களின் உணவுத் தேவைகள், சிப்ஸ் தயாரிப்பு மற்றும் ஜவ்வரிசி ஆலைகளின் பயன்பாட்டிற்கும் இந்த ரகம் முக்கியமாக பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது செம்பேன், மாவுப்பூச்சி, வேர் அழு கல் உள்ளிட்ட நோய்கள் மரவள்ளி பயிர்களை கடுமையாக தாக்கி வருகின்றன. இதனால் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் தடைப்படுவ தாக விவசாயிகள் தெரிவிக்கின்ற னர். இந்த நோய்களை கட்டுப்ப டுத்த தனியார் மருந்துக்கடைக ளில் அதிக விலை கொடுத்து மருந் துகள் வாங்கி பயன்படுத்தியும் பல னில்லை. மேலும், சில உரக்கடை களில் போலி நிறுவனங்களின் மருந்துகள் விற்பனை செய்யப்படு கிறது. அவற்றை பயன்படுத்திய தால் பயிர்கள் கருகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரி களிடம் பலமுறை புகார் தெரிவித் தும், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை. ஒரு ஏக்க ருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் நிலை யில், போதிய விலை கிடைக்கா ததால் செலவு செய்த தொகையில் பாதியைக்கூட திரும்பப்பெற முடி யாமல் விவசாயிகள் கடன் சுமை யில் சிக்கியுள்ளனர். எனவே, மர வள்ளிக்கிழங்கு பயிர்களை உடன டியாக ஆய்வு செய்து பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மர வள்ளிக்கிழங்கிற்கு அரசு சார்பில் அடிப்படை ஆதார விலை நிர்ண யம் செய்து விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
