ஜவ்வரிசி விலை அதிகரிக்கும் அபாயம் மரவள்ளிக்கிழங்கு தட்டுப்பாடு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>ஜவ்வரிசி விலை அதிகரிக்கும் அபாயம் மரவள்ளிக்கிழங்கு தட்டுப்பாடு</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 18- மரவள்ளிக்கிழங்கு சீசன் முடி வடைய உள்ளதால், ஜவ்வரிசி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, பெரம் பலூர், திருச்சி, ஈரோடு, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய் யப்படுகிறது. விவசாயிகளிடமி ருந்து கிழங்குகளை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து, ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், விவசாயி கள் சிலர், அருகே உள்ள சந்தைக ளில் கிழங்குகளை நேரடியாக விற் பனை செய்து வருகின்றனர். ஜவ்வ ரிசி தயாரிப்புக்கு மரவள்ளிக்கி ழங்கு தான் மூலப்பொருள் என்ப தால், வியாபாரிகளிடம் இருந்து ஆலை உரிமையாளர்கள் நேரடி யாக கொள்முதல் செய்து வருகின் றனர். நடப்பு சீசனில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை முடியும் நிலை யில் உள்ளதால், அதன் தேவை அதி கம் ஏற்பட்டு, தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து ஜவ்வரிசி தயாரிப்பாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை ஏறத்தாழ 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள 10 சதவிகிதமும் ஒரு மாத காலத் திற்குள் முடிவடைந்துவிடும். தற் போது மரவள்ளிக்கிழங்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு டன் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு டன் ஒப்பிடும்போது, இந்தாண்டு ஜவ்வரிசி தயாரிப்பு குறைந்துள் ளது. இதனால் 90 கிலோ கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.4 ஆயிரத்தி லிருந்து, ரூ.6 ஆயிரமாக அதிகரித் துள்ளது. கடைகளில் சில்லறை விற் பனை விலையும் உயர்ந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு தட்டுப்பாட் டால், இனிவரும் காலத்தில் ஜவ் வரிசி தயாரிப்பு குறைந்து, அதன் விலை அதிகரிக்கும், என்றனர்.</p>
