செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியில் முந்திரி விளைச்சல் அமோகம்
16 May 2026, 10:20 pm

செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியில் முந்திரி விளைச்சல் அமோகம்

மயிலாடுதுறை, மே 16- மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது.

அதே நிலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் முந்திரி விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து வருகிறது.

குறிப்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் பலா விவசாயத்தைப் போன்று முந்திரி மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியான பொறையாறு, காழியப்பநல்லூர், திருவிடைக்கழி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு சில விவசாயிகள் முந்திரி மரங்களை வளர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து முந்திரி விவசாயிகள் சிலரிடம் பேசுகையில்,“60, 70 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிறைய முந்திரி மரங்கள் காணப்பட்டன.

தற்போது அந்த மரங்களை விறகு மற்றும் செங்கல் சூளைக்காக அழித்து வருகின்றனர்.

காழியப்பநல்லூர் பகுதியில் முன்னோர்கள் உண்டாக்கிய முந்திரி மரங்களை பாதுகாத்து வருகிறோம்.

தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் பழங்கள் காய்த்து கனியாக குலுங்குகிறது.

முந்திரி அறுவடை பணியை தொடங்கி உள்ளோம். முந்திரி பழம் என்பது முந்திரி மரத்தில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் பேரிக்காய் வடிவத்தில் இருக்கும்.

இதில் ஆரஞ்சு பழத்தை விட ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது.

பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டிய இப்பழம், உடலுக்குக் குளிர்ச்சி தந்து, இரத்த சோகை மற்றும் செரிமானப் பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவுகிறது.

இதில் வைட்டமின் சி, பி, இ, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிக வைட்டமின் சி இருப்பதால் கிருமிநாசினியாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இ

ரும்புச் சத்து நிறைந்துள்ளதால், ரத்த சோகையை போக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தி, சரும ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இனிப்பு மற்றும் லேசான துவர்ப்பு கலந்த சுவை கொண்டது.

பழமாக உண்ணலாம், சாறு ஜாம் மற்றும் பழ பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

முந்திரி பழத்தை பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் நீர் சத்து வெளியேறி அழுகிவிடும்.

முந்திரி மரத்தின் உண்மையான பழம் அதன் அடியில் இருக்கும். தற்போது நாங்கள் முந்திரி பழங்களை கொட்டையுடன் அறுவடை செய்து வருகிறோம்.

பெரியோர் முதல் சிறுவர்கள் வரை வாங்கிச் சாப்பிடுகின்றனர்” என தெரிவித்தனர்.