தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போலி மருந்து தொழிற்சாலை மீதான வழக்குகள் வாபஸ்! அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை

13 Mar 2026, 4:52 pm
போலி மருந்து தொழிற்சாலை மீதான வழக்குகள் வாபஸ்! அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
<p><strong>போலி மருந்து தொழிற்சாலை மீதான வழக்குகள் வாபஸ்! அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை</strong></p> <p>புதுச்சேரி, மார்ச் 13- போலி மருந்து தொழிற்சாலை &nbsp; வழக்குகளை திரும்ப பெற்ற அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று &nbsp;சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் &nbsp;வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில், அரசி யல் கட்சி, ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ரெட்டியார் பாளையம் சிபிஎம் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. &nbsp;இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சீனுவாசன் கொளஞ்சியப்பன், மாநில குழு உறுப்பினர் சரவணன்,சிபிஐ நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சுப்பையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் அரிமா தமிழன், சிபிஐ எம்எல் கட்சி யின் மாநில நிர்வாகி பால சுப்பிர மணியன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன், மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் நிர்வாகிகள் மங்கையர்செல்வன், பஷீர், முருகானந்தம், அழகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் பல ஆயிரம் கோடிக்கு நடைபெற்ற போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை கண்டுபிடிப்பு வழக்கில் குற்றவாளி களை கைது செய்ய கோரி தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. தொடக்கத்தில் இருந்தே இப்பிரச் சனையில் குற்றம் சாட்டப்பட்ட வர்களை, காப்பாற்றவே என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசின் ஆட்சியாளர்கள் முயன்றனர். அரசி யல் கட்சிகளின் நிர்பந்தத்தால், &nbsp;ஆளுநர் தலையிட்டு சிபிஐக்கு இவ்வழக்கை மாற்றினார். &nbsp;கடந்த நான்கு நாட்களாக நடந்த சம்ப வங்களை பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டோரை காப்பாற்றவும், ஆட்சியாளர்கள் உதவுவதும் வெளிப்படையாக தெரிகிறது. குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை புதுச்சேரி அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறை யினர் நீதிமன்றத்தில் &nbsp;திரும்ப பெற்றுள்ளனர். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டோரை காப்பாற்ற முயல்கின்றனர்.நான்கு ஆண்டு களாக போலி மருந்து &nbsp;உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்துள்ள னர். முதல் புகாரே உத்தர பிர தேசத்தில்தான் பதிவானது. ஆட்சி யாளர்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவ்வழக்கில் 25 பேர் கைதாகி அனைவரும் தற்போது ஜாமினில் விடப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக்காரணங்களை கூறி வெளியே விட்டுள்ளனர். மருத்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாயிடம், மேலிடம் சொல்லியதால் வழக்கை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இந்த மேலிடம் யார் என்ற கேள்வி எழுகிறது. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதில், &nbsp;குற்றம்சாட்டப்பட்டோரின் பல பெயர்கள் விடுபட்டுள்ளது. &nbsp; புதுச்சேரி மக்களின் உயிரை பற்றி கவலையில்லாமல் அலட்சியத்துடன் புதுச்சேரி அரசு செயல்படுகிறது. ஆட்சியில் இருக்க இந்த அரசு தார்மீக உரிமை இல்லை. எனவே &nbsp;சிபிஐயிடம் உள்ள இவ்வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதுடன் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ள தால், வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தற்போது வழக்குகளை திரும்ப பெற்றதால் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனந்த கிருஷ்ணன், அரசின் சட்டத்துறை சார்பு செயலர் ஜான்சி ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். &nbsp;இவ்வழக்கில் முதல் &nbsp;குற்றவாளி, ஒன்றிய நிதி அமைச்சரை நேரில் சந்திக்கும் அளவுக்கு திறன் பெற்றவர். அவர் பல அரசியல் கட்சியி னருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும், ஏற்கெனவே அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, &nbsp;ஊழல் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக வருகின்ற மார்ச் &nbsp;23ம் தேதி சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற உள்ளது என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.