அனுமதி நேரத்தை தாண்டி பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
29 Mar 2026, 3:34 pm
<p><strong>அனுமதி நேரத்தை தாண்டி பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு </strong></p>
<p>இராஜபாளையம், மார்ச் 29- இராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரம் கிரா மத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் பிரச்சாரம் செய்தார். அவருக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை அனு மதி வழங்கப்பட்ட நிலையில், 6 மணி கடந்தும் பிரச்சா ரத்தை தொடர்ந்துள்ளார். இதனை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அவரிடம் நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியும், தொடர்ந்து பிரச்சாரத்தை தொடர்ந்துள்ளார். இதுகுறித்து வீடியோ சர்வே லென்ஸ் குழுவைச் சேர்ந்த ராமன்(57) சேத்தூர் ஊரக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
