திருச்சி விரைவு செய்திகள்
16 Jan 2026, 3:00 pm

குழந்தைகளுடன் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு பதிவு

குழித்துறை, ஜன.16- பள்ளியாடியைச் சேர்ந்த அம்புரோஸ் மகள் அனுஷா (44) பள்ளியாடி காட்டு விளையைச் சேர்ந்த மாதவன் மகன் ராஜேஷ் (44) இருவருக்கும் 2012 ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ராஜேஷ் கேட்டுக்கொண்டதின் படி 35 பவுன் தங்க நகை, 7 பவுன் செயின், 2 பவுன் பிரேஸ்லெட் ,ராஜேஷ் சகோ தரிக்கு ஒரு பவுனில் காப்பு, இரண்டு லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு ராஜேஷ் வீட்டில் குடும்ப மாக வாழ்ந்து வந்தனர். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. 8 ஆண்டுகள் கழிந்த பிறகு ராஜேஷு குடிப்பழக்கத் திற்கு அடிமையாகி அனுஷாவை பல ஆண்களுடன் தொடர்பு படுத்தி பேசி பிரச்சனையை உருவாக்கியுள்ளார். பின் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று வந்து கடந்த 29 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பள்ளியாடி காட்டு விளையைச் சேர்ந்த ஷாஜி தூண்டுதலின் பேரில் ராஜேஷ் அனுஷாவை தாக்கி இரு குழந்தைகளையும் அனுஷாவை யும் வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதுகுறித்து அனுஷா மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் மற்றும் ஷாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சோ்ந்த 3 பேர் தேர்வு

தூத்துக்குடி, ஜன. 16 இந்திய ஜூனியா் ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டியைச் சோ்ந்த ஒரு வீராங்கனை, 2 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழக ஜூனியா் ஹாக்கி அணி , தேசிய போட்டி யில் கடந்தாண்டு சிறப்பாக விளையாடியது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவில் பட்டியைச் சோ்ந்த சுபலட்சுமி, அருண், மணிமாறன் ஆகி யோர் இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்குத் தோ்வு பெற்றனா். தோ்வு பெற்ற வீரா்கள் பெங்களூரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வா். அங்கு சிறப்பாக விளையாடினால், 2027-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறலாம் பயிற்சி முகாமுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்களை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளா ளா் காளிமுத்து பாண்டியராஜா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரா் அஸ்வின், ஆல்ட்ரின் அதிசயராஜ், திருச்செல்வம் ஆகியோர் பாராட்டினா்.