கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
26 Nov 2025, 4:29 pm

சிறுமியை தாக்கி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு

கோவை, நவ.26- எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி யில் 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை குச்சி யால் அடித்து காயப்படுத்திய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி யைச் சேர்ந்த ஶ்ரீராம் (43) மற்றும் அவரது மனைவி பரிமளா (34) இருவரும் விசைத்த றிக் கூடத்தில் தறி ஓட்டும் தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இவர்களுக்கு ஹரிஷ் (12), புவ னேஷ் (9) என்ற மகன்கள் மற்றும் ஷாஷினி (7) என்ற மகள் உள்ளனர். இதில் ஷாஷினி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவ.7 ஆம் தேதியன்று, ஷாஷினி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆசிரியர் பெரியநாயகி இடது கை முட்டிக்குக் கீழ் குச்சியால் அடித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷாஷினி, இடது கையை மடக்கிப் பிடித்தவாறு வந்த தைப் பார்த்த தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந் தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சி யால் அடித்தார்” என்று கூறியதாகத் தெரி கிறது. மறுநாள் பள்ளிக்குச் சென்று ஆசிரி யையிடம் கேட்டபோது, “மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங் கள், செலவை நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், ஷாஷினியின் நிலை மோசமான தால், நவ.13 ஆம் தேதியன்று அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நவ.17 அன்று மாணவி விடு விக்கப்பட்டார். இந்நிலையில், ஷாஷினிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவ.21 ஆம் தேதி யன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இத னையடுத்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியர் பெரிய நாயகி மீது கருமத்தம்பட்டி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரி வுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வரு கிறது.

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை

ஈரோடு, நவ.26- சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி, கேட்டவரம்பாளையம், கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கரடி செல்வம் (எ) செல்வம் (38). இவர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் கரும்பு வெட்டும் வேலைக்கு வந்துள்ளார். அங்கு 14 வயது சிறுமியிடம் பழகி, அவரை பலமுறை பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், செல்வத்தை ஊரை விட்டு விரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து சேலம் இரும்பாலை, அழகுசத்திரம், பச்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி (37) என்பவருடன், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு பங்களாபுதூரில் உள்ள கோவிலில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையறிந்து குழந் தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுப் பிரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டபோது, அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப் பது தெரியவந்தது. இதற்கு செல்வம்தான் காரணம் என்று போலீசாரிடம் சிறுமி வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, செல்வத்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமாா், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வத்திற்கு இரண்டு பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வா யன்று தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என வும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.