தங்க நகைகளை பறித்த போலீசார் மீது வழக்கு
26 Nov 2025, 4:29 pm
<p><strong>தங்க நகைகளை பறித்த போலீசார் மீது வழக்கு</strong></p>
<p>கோவை, நவ.26– கட்டுமானத் தொழிலதிபரிடம் 1¼ கிலோ தங்க நகைகளை மிரட்டி பறித்ததாக காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், சிவானந்தா காலனி யைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் சோம சுந்தரம். இவரது வீட்டிற்கு கடந்தாண்டு செப்.17 ஆம் தேதியன்று இரவு செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த செல்வ ராஜ் தலைமையிலான 7 போலீசார், “நகை வியாபாரி முத்துக்குமாரிடம் தங்கம் வாங்கி மோசடி செய்ததாகப் புகார்” என்றுக்கூறி அவ ரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்ற னர். ‘தனக்கு முத்துக்குமார் என்ற நபரையே தெரியாது’ என்று சோமசுந்தரம் மறுத்தும், “வழக்கு போட்டாச்சு… தங்கத்தைத் திருப்பிக் கொடு, இல்லையெனில் கைது, சொத்து பறி முதல்” என மிரட்டியதாகத் தெரிகிறது. இத னால் அச்சமடைந்த சோமசுந்தரம் தனது உத வியாளர் மூலம் வெளியில் இருந்து 1¼ கிலோ தங்கநகைகளை (ரூ.1.25 கோடி மதிப்பு) வாங்கி ஒப்படைத்த பின்னரே, விடுவிக்கப்பட்டார். பின்னர் விசாரணையில், முத்துக்குமார் என்பவரே இல்லை; புகாரும் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தமில்லாத வழக்கு தொடர்பாக தன்னை மிரட்டி நகையை வாங்கிய ஆய்வாளர் செல்வராஜ் உட்பட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர குற்றப் பிரிவு காவல் துறையில் சோமசுந்தரம் புகார ளித்தார். ஆனால், அதன்மீது காவல்துறை நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சோம சுந்தரம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், அப்போதைய செல்வபுரம் காவல் ஆய்வா ளர் செல்வராஜ் மற்றும் போலீசார் மீது கொள்ளை, மிரட்டல், அதிகார துஷ்பிரயோ கம் உள்ளிட்ட பிரிவுகளில் செவ்வாயன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.</p>
